Mobiistar நிறுவம் இந்தியாவில் X1 நோட்ச் எனும் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் HD . பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா,AI . அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி, டூயல் 4ஜி வோல்ட்இ வசதி, 3020 Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Mobiistar X1 நோட்ச் சிறப்பம்சங்கள்:
– 5.7 இன்ச் 1498×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
– IMG பவர் விஆர் ரோக் GE8300
– 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3020 Mah பேட்டரி
விலை மற்றும் விற்பனை
மொபிஸ்டார் X1 Notch ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் ஷைன், மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.8,499 என்றும், 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.