மைக்ரோசாஃப்ட் ஐஓஎஸ் மற்றும் அண்ட்ராய்ட்-க்கான கோர்டானா குறித்து அறிவித்துள்ளது

மைக்ரோசாஃப்ட் ஐஓஎஸ் மற்றும் அண்ட்ராய்ட்-க்கான கோர்டானா குறித்து அறிவித்துள்ளது
HIGHLIGHTS

மைக்ரோசாஃப்ட்-இன் கோர்டானா கம்பேனியன்-இன் அண்ட்ராய்ட் பதிப்பு ஜூன் இறுதியில் வெளியிடப்படும். ஐஓஎஸ் பதிப்பு இந்த ஆண்டின் பின்பகுதியில் வெளிவரும்.

மைக்ரோசாஃப்ட்  ஐஓஎஸ் மற்றும் அண்ட்ராய்ட் தளத்திற்கான கோர்டானா பயன்பாட்டை அறிவித்துள்ளது. இது விண்டோஸ் 10 கணினியின் கோர்டானா எண்ணியல் உதவிக்கு ஒரு துணையாக செயல்படும். கணினியில் கைப்பேசி துணைக்கான பயன்பாடு இருப்பது, கூகிள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்-இல் இருந்து கோர்டானா பயன்பாட்டை நிறுவ உதவி செய்யும். அண்ட்ராய்ட் பதிப்பு அடுத்த மாத பின் பகுதியில் வெளி வர இருக்கும் நிலையில், ஐஓஎஸ் பதிப்பு, இந்த ஆண்டின் இறுதிக்குள் கிட்டும். 

அண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்-க்கான கோர்டானா, அதன் விண்டோஸ் பதிப்பை போலவே தோற்றமளிக்கிறது. பல்வேறு கருவிகளில் இருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இது மறுமொழி அளிக்க இயலும். ஆனால், அண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்-க்கான கோர்டானா, விண்டோஸ் கைப்பேசிகளின் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்காது. ‘ஒரு சில அம்சங்கள் கைப்பேசி உள்ளமைப்பை அணுக வேண்டி இருப்பதாலும், இந்த வசதி தற்போது ஐஓஎஸ் அல்லது அண்ட்ராய்ட்-இல் இல்லாததாலும், அமைப்புகள் மாற்றுவது, பயன்பாடுகளை இயக்குவது போன்றவை இந்த தளங்களுக்கான கோர்டானா கம்பேனியன்-இல், தற்போது கிட்டாது. இது போல,கைப்பேசியை கைகளால் தொடாமல், ‘ஹே கோர்டானா’ என குரல் கொண்டு இயக்க, கருவியின் ஒலிவாங்கியுடன் சிறப்பு ஒருங்கிணைப்பு தேவை. எனவே இந்த அம்சம் விண்டோஸ் கைப்பேசிகள் மற்றும் கணினிகளில் மட்டும் கிட்டும்’, என மைக்ரோசாஃப்ட் விரிவாக பதிவில் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட்  ஒரு புதிய கம்பேனியன்  பயன்பாட்டை கொண்டு வந்துள்ளது. இது கொண்டு விண்டோஸ் உபயோகிப்பாளர்கள், ஒன்நோட், ஒன்டிரைவ் போன்ற பயன்பாடுகளை கைப்பேசி தளத்தில் எளிதாக நிறுவுவதோடு, இவற்றின் மூலமாக அதிகவற்றை செய்து கொள்ளலாம். விண்டோஸ் 10-இல் இந்த கைப்பேசி கம்பேனியன் பயன்பாடு முன் நிறுவப்பட்டு வரும். இந்த பயன்பாடு கொண்டு, உபயோகிப்பாளர்கள் விண்டோஸ் 10 கணினி, அல்லது அண்ட்ராய்ட் அல்லது ஐஓஎஸ் கைப்பேசியின் உள்ளடக்கங்களை அணுகலாம். ‘நீங்கள எங்கிருந்தாலும் குறிப்புகளை எடுத்து கொள்ளுங்கள்-ஒன்நோட் கொண்டு நீங்கள் கணினியில் எழுதியிருக்கும் குறிப்புகளை உங்கள் கைப்பேசியில் காணலாம்.மேலும் உங்கள் கைப்பேசியில் நீங்கள் மாற்றும் குறிப்புகள், உங்கள் கணினியில் உடனுக்குடன் ஒருங்கிணைக்கப்படும். மேலும் உங்களுடைய எந்த கருவியில் இருந்து வேண்டுமானாலும், உங்கள் ஆபிஸ் கோப்புகளில் நீங்கள் வேலை செய்யலாம். கோப்புகளை கருவிகளுக்கு இடையே மாற்ற வருத்தப்பட தேவையில்லை. ‘ என மைக்ரோசாஃப்ட் கூறுகிறது.

அண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்-க்கான கோர்டானா வெளியீடு, பல்வேறு தளங்களில் இயங்கும் பயன்பாடுகளை வெளியிடும் மைக்ரோசாஃப்ட்  -இன் அண்மைய முயற்சிகளின் வழியே வருகிறது.ஆப்பிள்-இன் சிரி மற்றும் கூகிள்-இன் கூகிள் நவ் ஆகியவற்றிற்கான, மைக்ரோசாஃப்ட்  -இன் பதிலாக அறியப்படும் கோர்டானா, அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டு இந்த ஆண்டின் பின் பகுதியில் வெளிவர இருக்கும், விண்டோஸ் 10 இயங்குதளத்தின் ஒரு முக்கிய உறுப்பாகும். எண்ணியல் உதவி,மைக்ரோசாஃப்ட்-இன் புதிய உலாவியான எட்ஜ்-உடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. மைக்ரோசாஃப்ட்-இன் கம்பேனியன் பயன்பாடு மற்றும் கோர்டானா  ஒருங்கிணைப்பு குறித்து மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளி காட்சியை பாருங்கள்:

Kul Bhushan
Digit.in
Logo
Digit.in
Logo