புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் சியோமி நிறுவனம் பாப்-அப் கேமரா, அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் பல்வேறு உயர் ரக அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
சீனாவின் பிரபல சோசியல் வெப்சைட்டில் லீக் ஆகியுள்ள விவரங்களின் படி சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வுக்கான கவுன்ட்-டவுன் துவங்கி இருக்கிறது. இதனுடன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.
சீன வெப்சைட்டிகள் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயங்கும் என தெரியவந்துள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனாக Mi MIX 3 இருக்கும்.
Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, முந்தைய Mi மிக்ஸ் 2எஸ் மாடலில் இருந்ததை விட பெரிய ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் பிரத்யேக 5ஜி மோடெம் வழங்கப்படும் என்றும் 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. + 20 எம்.பி. + 13 எம்.பி. மூன்று கேமரா யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 3850 mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
மேலும் 3.5 mm . ஹெட்போன் ஜாக், மைக்ரோ usb போர்ட் மற்றும் ஸ்டோரேஜை கூடுதலாக நீட்டிக்க மைக்ரோ SD . கார்டு ஸ்லாட் வழங்கப்படுகிறது. சியோமி முன்னதாக அறிமுகம் செய்த Mi மிக்ஸ் 2 மற்றும் Mi மிக்ஸ் 2எஸ் மாடலில் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், மைக்ரோ USB . போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.