LG அதன் LG Q Stylus வரிசையில் ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது அதில் G Q Stylus, LG Q Stylus+ மற்றும் LG Q Stylus A ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது
LG நிறுவனத்தின் LG Q Stylus ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எல்ஜி கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்த ஸ்டைலஸ் 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
புதிய க்யூ ஸ்டைலஸ் மாடலில் 6.2 இன்ச் FHD பிளஸ் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
எல்ஜி ஸ்மார்ட்போனில் MIL-STD 810G சான்று பெற்ற ராணுவ தரம் கொண்ட டியூரபிலிட்டி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
LG Q Stylus Plus சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் 18:9 FHD+ 2160×1080 பிக்சல் 18:9 ஃபுல் விஷன் 389ppi 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750S பிராசஸர்
– மாலி T860 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
– 8 எம்பி முன்பக்க கேமரா
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 2.0
– 3,300 Mah . பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
LG Q Stylus Plus ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் மற்றும் மொரக்கன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 5-ம் தேதி முதல் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ரூ.21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.