LG நிறுவனத்தின் G6 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு விழாவில் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என பலரும் நினைக்காதீர்கள்.
ஸ்மார்ட்போன் வியாபார பிரிவில் எல்.ஜி. தனது வழக்கமான பாணியை மாற்றிக்கொள்ள முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் நிறைந்த வி30 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.ஜி. நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எவான் பிளாஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் எல்.ஜி. ஜி7 என அழைக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் எல்.ஜி. ஜி சீரிஸ்-க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் எல்.ஜி. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஜூடி (Judy) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
LG ID ஸ்மார்ட்போனின் பிளஸ் அல்லது எஸ் மாடலில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எல்.ஜி. ஜூடி ஸ்மார்ட்போனில் HDR 10- வசதி பெற்ற 6.1 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை டிஸ்ப்ளே MLCD+ தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய MLCD+ டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழக்கமான IPS LCD டிஸ்ப்ளேக்களை விட 35% குறைந்த மின்சக்தியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா செட்டப், இரண்டு 16 எம்.பி. சென்சார், IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் ராணுவ தர டியூரபிலிட்டி பெற்றிருக்கிறது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.