LG நிறுவனம் உருவாக்குகிறது சுருங்கக்கூடிய ஸ்மார்ட்போன்

Updated on 15-Apr-2019
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிடாத நிறுவனங்களில் எல்.ஜி.யும் ஒன்றாக இருக்கிறது. எனினும், இந்நிறுவனம் பத்து காப்புரிமைகளை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில்LG . பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி எல்.ஜி. மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு பதில் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களும் அடங்கும்.

காப்புரிமை விவரங்களை கொண்டு இந்த சாதனங்கள் உடனே வெளியாகும் என கூறிவிட முடியாது. எனினும், இந்த சாதனங்கள் ஆய்வு அல்லது உருவாக்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான மற்றொரு காப்புரிமை விவரங்களில் எல்.ஜி. ஸ்மார்ட்போன் சுருங்கக்கூடிய தன்மை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

LG பதிவு செய்திருந்த மற்றொரு காப்புரிமையில், வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காப்புரிமை கொரிய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு அக்டோபர் 23, 2018இல் காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 

காப்புரிமைகளில் தி ரோல், பை-ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், ரோல் கேன்வாஸ் மற்றும் இ-ரோல் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிகப்படியான காப்புரிமைகளில் ரோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவிர மற்ற விண்ணப்பங்களில் சிக்னேச்சர் ஆர், ஆர் ஸ்கிரீன், ஆர் கேன்வாஸ், ரோடோலோ போன்ற பெயர்கள் இடம்பெற்றிருக்கின்ற

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :