எல்ஜி நிறுவனத்தின் K30 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி X4 பிளஸ் போன்று காட்சியளிக்கிறது. எல்ஜி K30 ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீடு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
அமெரிக்காவில் எல்ஜி K30 ஸ்மார்ட்போன் டிமொபைல் சேவையுடன் ஒப்பந்தமில்லாமல் 225 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,000) விலையிலும், ஒப்பந்தத்துடன் மாதம் 9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.600) என 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எல்ஜி K சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன.
எல்ஜி K30 சிறப்பம்சங்கள்:
– 5.3 இன்ச் ஹெச்டி 720×1280 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
– குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
– 2 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– கைரேகை சென்சார்
– 2880 எம்ஏஹெச் பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது புதிய எல்ஜி K30 அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த எல்ஜி K10 (2018) ஸ்மார்ட்போனின் ரீபிரான்டெட் வெர்ஷனாக இருக்கிறது. எனினும் எல்ஜி K10 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எல்ஜி K30 ஆன்ட்ரய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.