LG நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கல் மற்றும் வீடியோ சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் இருந்து வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி7 நியோ என்ற பெயரில் வெளியானது.
தற்சமயம் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி7 தின்க் என்ற பெயரில் LM-G710M குறியீட்டு பெயருடன் காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் முதற்கட்ட சோதனைகளில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய புகைப்படங்களும், ஏற்கனவே வெளியான படங்களுடன் ஒற்றுபோகிறது.
முன்னதாக எவான் பிளாஸ் வெளியிட்டிருந்த ஜி7 தின்க் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களும் ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன. வெளியீட்டிற்கு முந்தைய மென்பொருள் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போன் 252,473 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
Lg G 7 ThinQ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 6.1 இன்ச் 1440×3120 பிக்சல் ஃபுல் விஷன் MLCD+ 19.5:9 டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த எல்ஜி UX
– 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/1.5 அப்ரேச்சர், எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜி