லெனோவா Z5 Pro GT ஸ்மார்ட்போனை இறுதியாக அறிமுகப்படுத்தியுள்ளது இந்த ஸ்மார்ட்போனை Lenovo Z5s உடன் சந்தையில் இறக்கப்பட்டிருந்தது. இதில் பயனர்களுக்கு 7nm Qualcomm chip மற்றும் 12ஜிபி வகையில் இருக்கிறது. இதனுடன் லெனோவா பிராண்ட் இந்த போனை Android Pie யின் அடிப்படையில் Lenovo ZUI 10 யில் இயங்குகிறது. இந்த போனில் பயனர்களுக்கு நோட்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த சாதனம் ஸ்லைடர் டிசைன் உடன் வருகிறது இதனுடன் இதில் செக்யுரிட்டிக்காக இந்த டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் மற்றும் பேஸ் அன்லாக் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை லெனோவோ இசட்5 ப்ரோ பெற்றுள்ளது.
கார்பன் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள லெனோவோ Z 5 ப்ரோ GT . ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகளில் ரெட் மற்றும் பிளாக் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. வெர்ஷனில் அதிகபட்சம் 50 ஆப்களை ஒரே நேரத்தில் திறக்க முடியும்.
லெனோவோ Z5 ப்ரோ GT. சிறப்பம்சங்கள்:
– 6.39 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல் HD . பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
– 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ZUI 10
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.8, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 24 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX576 சென்சார், f/1.8
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– 8 எம்.பி. ஐ.ஆர். இரண்டாவது செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3350Mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
இதன் அம்சங்களை பொருத்த வரை 6.39 இன்ச் ஃபுல் HD பிளஸ் சூப்பர் AMOLED 19:5:9 எஸ்பெக்ட் டிஸ்ப்ளே, ஸ்லைடர் வடிவமைப்பு, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி.IR ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 16 எம்.பி. + 24 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சோனி சென்சார், 3350 Mah .பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை தகவல்
லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 2698 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.27,780), 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,865), 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3398 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,985) என்றும் டாப்-என்ட் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் 4395 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.