AI யின் இரட்டை கேமரா உடன் வருகிறது இந்த Lenovo Z5 ஸ்மார்ட்போன்

Updated on 21-May-2018
HIGHLIGHTS

இதில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போன் சுமார் 95% அதிகமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Lenovo Z5 ஸ்மார்ட்போனின் முதல் டீசரில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதை அந்நிறுவன துணை தலைவர் சாங் செங் வெய்போ போஸ்ட்-இல் தெரிவித்திருந்த நிலையில், Z5 ஸ்மார்ட்போனின் மற்றொரு அம்சத்தை புதிய டீசரில் தெரிவித்திருக்கிறார்.

புதிய டீசரில் லெனோவோ Z5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி (4TB) இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய இன்டெர்னல் மெமரி கொண்டு ஸ்மார்ட்போனில் 10 லட்சம் புகைப்படங்கள், 2000 ஹெச்டி திரைப்படங்கள் மற்றும் 1,50,000 பாடல்களை சேமிக்க முடியும். இன்டெர்னல் மெமரி தவிர புதிய ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 128 ஜிபி அல்லது 256 ஜிபி வரையிலான இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு வரும் நிலையில், லெனோவோ  Z5 ஸ்மார்ட்போன் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4000 ஜிபி இன்டெர்னல் மெமரி மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போன் சுமார் 95% அதிகமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் முழுமையான ஸ்கிரீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். 

லெனோவோ Z5 ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெறலாம் என தோன்றினாலும், புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் இருக்காது என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்பக்கம் உள்ள பெரிய பெசல்களை டெலிட் வழிமுறையை லெனோவோ கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபோன் X போன்று இல்லாமல் புதிய ஸ்மார்ட்போனின் முன்பக்கம் செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் போன்றவை இடம்பெறவில்லை. அந்த வகையில் லெனோவோ  Z5  ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமராவும், ஆடியோ வைப்ரேஷன் மூலமாக டிரான்ஸ்மிட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லெனோவோ நிறுவன துணை தலைவரின் முந்தைய போஸ்ட்களில் புதிய ஸ்மார்ட்போனில் பயன்படுத்த 18 காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பங்களும், நான்கு தொழில்நுட்ப திருப்புமுனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :