நாட்டின் சொந்த பிராண்ட் Lava புதிய போன் அறிமுகம்

நாட்டின் சொந்த பிராண்ட் Lava புதிய போன் அறிமுகம்
HIGHLIGHTS

Lava இந்தியாவில் புதிய பட்ஜெட் போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது,

இந்த போன் Lava Yuva Star என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Lava Yuva Star 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.6,499க்கு வாங்கலாம்

Lava இந்தியாவில் புதிய பட்ஜெட் போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த போன் Lava Yuva Star என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4ஜி வசதியுடன் வெளியிடப்பட்ட பட்ஜெட் போன் இது. குறைந்த விலையில் நல்ல சிறப்பம்சங்கள் வழங்கும் ஃபோனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த ஃபோன் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு கோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்த ஃபோன் ஆண்ட்ராய்டின் குறைந்த வெர்சனில் இயங்குகிறது.

Lava Yuva Star விலை தகவல்

Lava Yuva Star 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.6,499க்கு வாங்கலாம். இது வெள்ளை, கருப்பு மற்றும் லாவெண்டர் போன்ற பல கலர் விருப்பங்களில் வருகிறது. ரீடைளர் விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கலாம் . சாதனத்தை வாங்குபவர்களுக்கு வீட்டிலேயே சேவையும் வழங்கப்படும்.

Lava Yuva Star சிறப்பாசம்

லாவா யுவா ஸ்டார் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் நல்ல சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் 6.75 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உள்ளது, இது 60 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது இது தவிர, இந்த டிஸ்ப்ளேயில் 5 எம்பி செல்ஃபி கேமராவைப் வழங்குகிறது

Lava Yuva Star 13 MP ப்ரைம் பின்புற கேமரா மற்றும் AI சென்சார் கொண்டுள்ளது. பின்புறத்தில் LED ப்ளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. முன் கேமரா 5 மெகாபிக்சல். போனில் 5 ஆயிரம் mAh பேட்டரி உள்ளது, இது Type-C போர்ட் மூலம் 10W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

இதுமட்டுமின்றி லாவா யுவா ஸ்டார் ஸ்மார்ட்போனில் 4ஜி வசதியுடன் யுனிசாக் 9863சி பிராசஸர் உள்ளது, இது தவிர பவர்விஆர் ஜிஇ8322 ஜிபியுவும் போனில் உள்ளது. இது தவிர, போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இருப்பினும், மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் இந்த ஸ்டோரேஜயும் அதிகரிக்கலாம். இது மட்டுமின்றி, விர்ச்சுவல் ரேமின் விருப்பத்தையும் நீங்கள் பெறுவீர்கள், இது 4ஜிபி வரை சப்போர்டுடன் கிடைக்கிறது. இதன் பொருள் ரேம் 8 ஜிபி ஆகும்.

இந்த மொபைலில் வாட்டர் டிராப் நாட்ச், பக்கவாட்டில் இருக்கும் கைரேகை சென்சார் இந்த போனில் கிடைக்கிறது. இது தவிர, போனில் ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 கோ பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பொருள் நீங்கள் போனில் சுத்தமான மற்றும் பயனர் பிரன்ட்லி UI ஐப் பெறலாம் .

இதையும் படிங்க Infinix Note 40X 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo