Lava Yuva 3 Pro அறிமுக தேதி அறிவிப்பு, அதற்க்கு முன்பே பல தகவல் லீக்

Lava Yuva 3 Pro அறிமுக தேதி அறிவிப்பு, அதற்க்கு முன்பே பல தகவல் லீக்
HIGHLIGHTS

லாவாவின் லாவா யுவா 3 ப்ரோ இந்த வாரம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்

Lava Yuva 3 Pro 4G டிசம்பர் 14 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று X யில் ஒரு போஸ்ட்டில் Lava Mobiles வெளிப்படுத்தியுள்ளது

இதன் விலை 11,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என்கிறார்

ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள பெரிய நிறுவனங்களில் ஒன்றான லாவாவின் லாவா யுவா 3 ப்ரோ இந்த வாரம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். இது இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Lava Yuva 3 Pro மாற்றும். இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் டீஸரை நிறுவனம் வழங்கியுள்ளது.

Lava Yuva 3 Pro இந்திய அறிமுக தேதி

Lava Yuva 3 Pro 4G டிசம்பர் 14 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று X யில் ஒரு போஸ்ட்டில் Lava Mobiles வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனம் தனது டிசைன் வீடியோ டீசரில் காட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தங்க நிறத்தில் தெரியும். பின்புற பேனலின் வலது மூலையில் சற்று மேலே வர்ட்டிக்கள் கேமரா மாட்யுளில் இரண்டு தனித்தனி வட்ட கேமரா கொண்டுள்ளது. இதனுடன், LED பிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் நடுப்பகுதி சட்டத்தின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளது.

லாவா Yuva 3 Pro டிசைன், சிறப்பம்சம் மற்றும் விலை தகவல்

டிப்ஸ்டர் முகுல் ஷர்மா (@stufflistings) இந்த ஸ்மார்ட்போனின் சிறப்ப்ம்சம்ன்கள் பற்றிய தகவலையும் அளித்துள்ளார். இதனுடன், அதன் டிசைன் லீக் ஆகியுள்ளது இதில், இந்த ஸ்மார்ட்போன் கோல்டன், பச்சை மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகிறது. இதன் விலை 11,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என்கிறார்

இந்த டிப்ஸ்டர். இது 90 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டுடன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். Lava Yuva 3 Pro ஆனது Unisoc T606 சிப்செட் உடன் 8 GB RAM மற்றும் 128 GB UFS 2.2 ஸ்டோரேஜை பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்படலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இருக்கலாம்.

இதையும் படிங்க: Realme V50, V50s அறிமுகம், இந்த அனைத்து அம்சங்களையும் தெருஞ்சிகொங்க

கடந்த மாதம் நிறுவனம் Lava Blaze 2 5G ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. Lava Blaze 2 5G இன் 4 GB + 64 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999 மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 10,999 ஆகும். இது கிளாஸ் ப்ளூ, கிளாஸ் லாவெண்டர் மற்றும் கிளாஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் ப்ரோசெசர் ஆக்டா-கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 6020 SoC பொருத்தப்பட்டுள்ளது. இது 6 GB LPDDR4X ரேம் மற்றும் 128 GB UFS 2.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மைக்ரோ SD கார்டு மூலம் இதன் ஸ்டோரேஜை 1TB வரை அதிகரிக்க முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo