Lava Yuva 3 Pro வெறும் 8999 ரூபாய்க்கு அறிமுகம், டாப் அம்சங்கள் பாருங்க

Lava Yuva 3 Pro வெறும் 8999 ரூபாய்க்கு அறிமுகம், டாப் அம்சங்கள் பாருங்க
HIGHLIGHTS

Lava தனது புதிய ஸ்மார்ட்போனான Lava Yuva 3 Pro இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

யுவா 2 ப்ரோவின் வாரிசாக இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் வந்துள்ளது.

யுவா 3 ப்ரோவில் 6.5 இன்ச் LCD டிஸ்ப்ளே உள்ளது.

Lava தனது புதிய ஸ்மார்ட்போனான Lava Yuva 3 Pro இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுவா 2 ப்ரோவின் வாரிசாக இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் வந்துள்ளது. யுவா 3 ப்ரோவில் 6.5 இன்ச் LCD டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. யுவா 3 ப்ரோவின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Lava Yuva 3 Pro யின் விலை தகவல்

விலையைப் பற்றி பேசினால், லாவா யுவா 3 ப்ரோவின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனை டெDesert Gold, Forest Viridian மற்றும் Meadow Purple நிற விருப்பங்களில் வாங்கலாம். லாவா இ-ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ ஆர்டர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

Lava Yuva 3 Pro சிறப்பம்சம்.

Lava Yuva 3 Pro டிஸ்ப்ளே மற்றும் டிசைன்

லாவா யுவா 3 ப்ரோவில் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது, இதன் ரெசல்யூஷன் HD + 1600 x 720 பிக்சல்கள், 269 PPI மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட்கொண்டிருக்கும், லாவா யுவா 3 ப்ரோ கிளாஸ் பின்புறத்துடன் கூடிய பிளட் பிரேம் டிசைனை கொண்டுள்ளது.

ப்ரோசெசர்

இந்த ஸ்மார்ட்போன் Unisoc T616 ப்ரோசெசருடன் வருகிறது. இந்த ஃபோனில் 8GB LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உள்ளது. ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில், இது ஆண்ட்ராய்டு 13 யில் இயங்குகிறது. நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது.

இதையும் படிங்க:Facebook மற்றும் Instagram உங்களை நோட்டம் இடுபவரை எப்படி தடுப்பது

கேமரா

இந்த போனில் வர்டிக்கள் டுயள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது கேமரா செட்டிங் பொறுத்தவரை, இந்த போனில் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது, மேலும் செகண்டரி கேமரா குறித்த எந்த தகவலும் தற்போது இல்லை. இதன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனில் ஒரு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி விருப்பங்களில் 3.5 mm ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், யுஎஸ்பி டைப் சி போர்ட், டூயல் சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0 மற்றும் GNSS ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo