Lava Storm 5G போன் அறிமுகம், இதன் டாப் அம்சம் தெருஞ்சிகொங்க
கடந்த வாரமே Lava Yuva 3 Pro போனை அறிமுகம் செய்தது,
இந்த புதிய போனின் பெயர Lava Storm 5G ஆகும்,
Lava Storm 5G விலை பற்றி பேசுகையில் இதன் 8GB + 128GB வேரியன்ட் விலை 13,499ஆகும்
கடந்த வாரமே Lava Yuva 3 Pro போனை அறிமுகம் செய்தது, அறிமுகம் செய்த ஒரே வாரத்தில் லாவா மற்றொரு புதிய போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த புதிய போனின் பெயர Lava Storm 5G ஆகும், இந்த போன் 5G கனேக்டிவிட்டியுடன் வரும். இந்த போனின் பல லீக் தகவலுக்கு பிறகு இறுதியாக இது வெற்றிகரமாக அறிமுகமானது இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
Lava Storm 5G விலை தகவல்
Lava Storm 5G விலை பற்றி பேசுகையில் இதன் 8GB + 128GB வேரியன்ட் விலை 13,499 ரூபாயில் வரும் பேங்க் ஆபர் சலுகையாக 1500 ரூபாய் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை 11,999ரூபாய்க்கு வாங்கலாம்.
இந்த போனின் விற்பனை பற்றி பேசுகையில் இது டிசம்பர் 28 முதல் லாவா இ-ஸ்டோர் அல்லது Amazon யிலிருந்து வாங்கலாம், மேலும் இது கேல்கிரீன் அல்லது தண்டர் பிளாக் கலர் விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
Lava Storm 5G டாப் சிறப்பம்சம்
Lava Storm 5G டிசைன்
இந்த போனின் டிசைன் சாம்சங் போன்களை போல் இருக்கிறது, இது ஒரு பிளாட் பிரேம் மற்றும் வெர்டிக்கள் கேமரா மாட்யுல் கொண்டுள்ளது.
டிஸ்ப்ளே
Lava Storm 5G டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் 6.78-இன்ச் கொண்ட பன்ச் ஹோல் டிஸ்ப்ளே உடன் LCD பேணல் கொண்டுள்ளது, மேலும் இது 2460 x 1080 பிக்சல் ரேசளுசனுடன் 396 PPI மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.
ப்ரோசெசர்
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் MediaTek Dimensity 6080 சிப்செட்டுடன் வருகிறது. மேலும் இந்த போன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இது Android 13 யில் வருகிறது மற்றும் Android 14 அப்டேட் விரைவில் கிடைக்கும், மேலும் இதில் 2 வருட செக்யுரிட்டி அப்டேட் கிடைக்கும்
கேமரா
இந்த போனில் இரண்டு பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் யூனிட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் செல்பிக்கு 16MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி
இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5,000mAh பேட்டரி உடன் 33W சார்ஜிங் சப்போர்ட் கொடோக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: Amazon பயனர்களுக்கு கிடைக்கும் Xmas Gift இந்த வாய்ப்பை பயன்படுத்திகொங்க
கனெக்டிவிட்டி
இந்த போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0,GNSS, மற்றும் USB Type-C. ஆகியவை அடங்கும், இந்த போன் 8.96mm திக்னஸ் உடனும் 214g. இடை கொண்டுள்ளது, இந்த போனில் 3.5 mm ஹெட்ஃபோன் ஜாக் தவிர, இது மைக்ரோ SD கார்டு ஸ்லாட் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile