Lava shark smartphone launched for just rs 6999 specs features and more
Lava திங்கட்கிழமை இந்தியாவில் அதன் Lava Shark போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனில் AI சப்போர்டுடன் வருகிறது, மேலும் இந்த போன் Unisoc T606 சிப்செட் கொண்ட ப்ரோசெசர் இருக்கிறது மேலும் இது Android 14 உடன் வருகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
லாவா ஷார்க் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.6,999. இந்த போனுக்கு லாவா நிறுவனம் 1 வருட உத்தரவாதத்தையும், இலவச வீட்டு சேவையையும் வழங்குகிறது. இது தற்போது லாவா சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. கஸ்டமர்கள் இந்த போனை ஸ்டீல்த் பிளாக் மற்றும் டைட்டானியம் கோல்ட் கலர்களில் வாங்கலாம்.
டிஸ்ப்ளே: இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், Lava Shark போனில் 6.67-இன்ச் கொண்ட பெரிய ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது மேலும் இதில் சிறந்த விஷுவல் அனுபவத்தை வழங்குகிறது, மேலும் இந்த போனில் HD+ பஞ்ச ஹோல் டிஸ்ப்ளே உடன் 720 x 1612 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது மற்றும் இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது.
ப்ரோசெசர்: லாவா ஷார்க் மொபைலில், பிராண்ட் UNISOC T606 ஆக்டா-கோர் செயலியை வழங்கியுள்ளது, இது மென்மையான செயல்திறன் மற்றும் சிறந்த பல்பணி அனுபவத்தை வழங்குகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: இந்த போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி வெர்ஜுவல் ரேமிற்கான சப்போர்டுடன் வருகிறது, இது மொத்தம் 8 ஜிபி வரை மெமரி அனுபவத்தை அனுமதிக்கிறது. லாவா ஷார்க் 64 ஜிபிஇன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை 256 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
கேமரா : லாவா ஷார்க் ஸ்மார்ட்போன் 50MP AI பின்புற கேமராவை வழங்குகிறது, இது LED ஃபிளாஷ் உடன் வருகிறது மற்றும் சிறந்த புகைப்பட அனுபவத்தை வழங்குகிறது. முன்பக்க கேமரா: இந்த போனில் 8MP முன்பக்க கேமரா உள்ளது, இது ஸ்கிரீன் ஃபிளாஷ் உடன் வருகிறது மற்றும் குறைந்த வெளிச்சத்திலும் நல்ல செல்ஃபிக்களை எடுக்க முடியும்
பேட்டரி: இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5000mAh பேட்டரியுடன் வருகிறது, இது நீண்ட மணிநேர பயன்பாட்டை வழங்குகிறது. இதனுடன், சாதனம் 18W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது , இருப்பினும் பெட்டியில் 10W சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் : லாவா ஷார்க் ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 இயக்க முறைமையில் இயங்குகிறது, இது பயனர்களுக்கு புதிய மற்றும் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.
செக்யூரிட்டி: இது பக்கவாட்டு பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் முகம் திறத்தல் அம்சத்தைக் கொண்டுள்ளது, இது போனை பாதுகாப்பாகவும் விரைவாகவும் திறக்க உதவுகிறது.
இதையும் படிங்க பக்கா மாஸ் ஆர்டர்னா அது இதன் Samsung யின் இந்த போனில் ரூ,43,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்