Lava Z81 ஸ்மார்ட்போன் 9,499ரூபாய்க்கு அறிமுகம்…!
லாவா நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசட் சீரிஸ் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் Z81 என அழைக்கப்படுகிறது.
லாவா நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசட் சீரிஸ் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் Z81 என அழைக்கப்படுகிறது.
லாவா நிறுவனத்தின் Z81 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் HD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்.எம். குவாட்-கோர் பிராசஸர், அதிகபட்சம் 3 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஸ்டூடியோ மோட் மற்றும் 3000 mah . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
LAVA Z81 சிறப்பம்சங்கள்:
– 5.7 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12 என்.எம். பிராசஸர்
– IMG PowerVR GE-class GPU
– 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்டார் ஓ.எஸ். 5.0
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
லாவா இசட்81 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கும். இதன் 2 ஜி.பி. வேரியன்ட் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile