உள்நாட்டு நிறுவனமான லாவா, புதிய லாவா பிளேஸ் NXT போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Lava Blaze NXT என்பது லாவா பிளேஸ் தொடரின் புதிய உறுப்பினர். இந்த தொடர் இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. Lava Blaze NXT உடன், MediaTek Helio G37 செயலி 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜை பெறலாம். இது தவிர, எச்டி பிளஸ் டிஸ்ப்ளே போனில் கிடைக்கும். போனில் மூன்று பின்புற கேமராக்களும் உள்ளன.
லாவா பிளேஸ் Nxt ஸ்மார்ட்போன் கிலாஸ் கிரீன், கிலாஸ் ரெட் மற்றும் கிலாஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், லாவா வலைதளங்களில் டிசம்பர் 2 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் லாவா நிறுவனம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே வந்த இலவச சர்வீஸ் செய்து கொடுக்கிறது.
லாவா பிளேஸ் சீரிசில் புது ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பிளேஸ் Nxt ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 4ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், விஜிஏ கேமரா, 8MP செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது