Lava Blaze 2 Pro இந்தியாவில் பட்ஜெட் ரேஞ்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங் சப்போர்ட் 2.5D கர்வ்ட் ஸ்க்ரீன் மற்றும் 90Hz அப்டேட் வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் விருப்பமும் வழங்கப்படுகிறது. மேலும் இதில் இருக்கும் அம்சங்களை பார்க்க;லாம்.
Lava Blaze 2 Pro ஒரே ஒரு வேரியண்டில் வருகிறது இது 8 GBரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதன் விலை 9,999ரூபாயாக இருக்கிறது, இது தண்டர் பிளாக், ஸ்வாக் ப்ளூ மற்றும் கூல் கிரீன் வண்ணங்களில் வாங்கலாம். இதன் விற்பனை எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
Lava Blaze 2 Pr போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இதில் 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே மற்றும் இதில் 2.5D கர்வ்ட் ஸ்க்ரீன் கொண்டுள்ளது மற்றும் இதில் 90Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது இதனுடன் இதில் 720×1600 பிக்சல் ரேசளுசன் கொண்டுள்ளது
இந்த போனில் octa-core Unisoc T616 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. இதன் முதல் சென்சார் 50 மெகாபிக்சல்கள் மற்றும் மீதமுள்ள இரண்டு சென்சார்கள் 2 மெகாபிக்சல்கள். செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இந்த போனில் பேட்டரியை பற்றி பேசினால் இதில் 5000Mahஇருக்கிறது இதனுடன் இதில் 18W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இந்த போனில் 4ஜி LTE வைஃபை, புளூடூத் 5.0, GPS யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற அம்சங்கள் உள்ளன. இதன் எடை 190 கிராம். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளிட்ட ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது