Lava Blaze 2 ஸ்மார்ட்போன் 11GB ரேமுடன் ரூ,9000 விலையில் அறிமுகம்.
லாவா தனது பிளேஸ் சீரிஸின் புதிய போனான Lava Blaze 2 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
Lava Blaze 2 Unisoc T616 செயலியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் கிளாஸ் புளூ, கிளாஸ் பிளாக் மற்றும் கிளாஸ் ஆரஞ்சு என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது
லாவா தனது பிளேஸ் சீரிஸின் புதிய போனான Lava Blaze 2 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் Lave Blaze 5G இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Lava Blaze 2 Unisoc T616 செயலியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோனில் 11 ஜிபி ரேம் மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. ஃபோனில் 13 மெகாபிக்சல் இரட்டை கேமரா அமைப்பு மற்றும் பிரீமியம் க்ளாஸ் பின்புற வடிவமைப்பு உள்ளது. போனின் மற்ற குறிப்புகள் மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்வோம்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் கிளாஸ் புளூ, கிளாஸ் பிளாக் மற்றும் கிளாஸ் ஆரஞ்சு என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் லாவா வலைதளங்களில் ஏப்ரல் 18 ஆம் தேதி துவங்குகிறது.
Lava Blaze 2 சிறப்பம்சம்.
புதிய லாவா பிளேஸ் 2 மாடலில் 6.5 இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளே, யுனிசாக் டி616 ஆக்டா கோர் பிராசஸர், 6 ஜிபி ரேம், 5 ஜிபி வரை கூடுதலாக விர்ச்சுவல் ரேம் வழங்கப்படுகிறது.
Lava Blaze 2 ஆனது Octa Core Unisoc T616 செயலியுடன் 6 GB வரை ரேம் பெறுகிறது. ரேமை கிட்டத்தட்ட 11 ஜிபி வரை அதிகரிக்கலாம். 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பகம் போனுடன் வழங்கப்பட்டுள்ளது. போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் பாதுகாப்பிற்காக கால் ரெக்கார்ட் செய்யும் வசதியும் உள்ளது.
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் லாவா பிளேஸ் 2 மாடலில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile