டுயல் டிஸ்ப்ளே உடன் அறிமுகமான Lava ஸ்மார்ட்போன் டாப் அம்சம்
Lava தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான Lava Agni 3 சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது
இது ஒரு மிட்-ரேஞ்ச் போன் ஆகும், இது பிரீமியம் அனுபவத்தை வழங்கும்
. இந்த போனில் லேட்டஸ்ட் ஐபோன் வேரியன்ட் போன்ற எக்சன் வட்டன் உள்ளது
Lava தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான Lava Agni 3 சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது ஒரு மிட்-ரேஞ்ச் போன் ஆகும், இது பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த போனில் லேட்டஸ்ட் ஐபோன் வேரியன்ட் போன்ற எக்சன் வட்டன் உள்ளது, இது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்யப்படும் .
மற்றொரு சிறப்பு அம்சம் இதன் டுயல் டிஸ்ப்ளே . இந்த ஃபோனின் கேமரா மாட்யுல் ஒரு டிஸ்ப்ளே உடன் வருகிறது, இது நோட்டிபிகேசன்களை காட்டுகிறது மற்றும் வானிலை பற்றிய தகவல்களை வழங்குகிறது. புதிய போனின் விலை, கிடைக்கும் தன்மை, சிறப்பம்சங்கள் மற்றும் சிறந்த அம்சங்களை நோக்கி நகர்வோம்.
Lava Agni 3 யின் விலை
லாவா அக்னி 3 இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபிஇன்டெர்னல் ரூ 20,999 க்கு சார்ஜர் இல்லாமல் கிடைக்கும். அதேசமயம் 66W சார்ஜர் கொண்ட அதே வேரியன்ட் விலை ரூ.22,999. மறுபுறம், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் சார்ஜர் விலை ரூ.24,999 ஆக வைக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியாவில் ரூ.499க்கு ப்ரீஆர்டர் செய்ய இந்தக் போன் கிடைக்கிறது மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி விற்பனைக்கு வரும். இருப்பினும், முன்பதிவு செய்யும் கஸ்டமர்கள் அக்டோபர் 8 ஆம் தேதி போனை வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஹீதர் கிளாஸ் மற்றும் பிரிஸ்டைன் கிளாஸ் என இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது.
கூடுதலாக, லாவா அக்னி 3 பயனர்கள் ரூ.8000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பெறலாம், அதே சமயம் அக்னி 2 பயனர்கள் ரூ.4000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பெறலாம்.
Lava Agni 3 டாப் அம்சம்
டிஸ்ப்ளே : லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் 1.5K 3D கர்வ்ட் AMOLED ப்ரைமரி டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது. அதேசமயம் 1.74-இன்ச் AMOLED ஸ்க்ரீனனது போனின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது, இது கேமரா சென்சார்களுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.
பர்போமான்ஸ் : இந்த ஸ்மார்ட்போனில் MediaTek டிமன்சிட்டி 7300x ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது, இதை Moto Razr 50 போலடபில் போனிலும் காணலாம். இந்த சிப்செட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சிறந்த செயல்திறனுக்காக 8ஜிபி மெய்நிகர் ரேம் சப்போரட்டை வழங்குகிறது.
கேமரா: போடோக்ரபிக்கு இந்த போனில் , OIS + EIS உடன் 50MP முதன்மை சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் + EIS உடன் 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க, EIS சப்போர்டுடன் 16MP முன் கேமராவைப் பெறலாம்.
பேட்டரி மற்றும் சார்ஜிங்: லாவா அக்னி 3 ஆனது 66W வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சாப்ட்வேர்: ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, இந்த புதிய லாவா போன் ஆண்ட்ராய்டு 14ல் இயங்குகிறது. இதன் மூலம், பயனர்கள் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android 15, 16, 17) மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்களை பெறலாம்..
மற்ற அம்சங்கள்: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Lava Agni 3 உடன், நீங்கள் Dolby Atmos, USB Type-C போர்ட் மற்றும் பெரிய நீராவி குளிரூட்டும் அறையுடன் கூடிய இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் பெறலாம்.
இதையும் படிங்க: Lava Agni 3 5G VS Motorola Edge 50 Fusion: 20 ஆயிரம் பட்ஜெட்டில் iphone போன்ற அம்சம் எது பெஸ்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile