Lava நிறுவனம் Lava Agni 2 5G போனை அறிமுகம் செய்த பிறகு இப்பொழுது Lava Agni 3 போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது, போனின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதோடு, நிறுவனம் அதன் டீசரையும் வெளியிட்டுள்ளது. போனின் டிசைன் பற்றிய பல தகவல்கள் சமீபத்திய டீசரில் கிடைக்கின்றன. இந்த போன் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிறுவனத்தின் வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
Lava Agni 3 இந்தியாவில் அக்டோபர் 4 ஆம் தேதி 12:00pm மணிக்கு அறிமுகம் செய்யப்படும், நிறுவனம் X யில் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மூலம் போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக தற்போது போனின் டீஸர்களை வெளியிட்டு அதன் டிசைன் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த போனின் லைவ் இமேஜ் அறிமுகத்திற்கு முன்பே லீக் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனின் லீக் அம்சங்கள் பற்றி பேசுகையில் இது இரண்டு கலர் விருப்பங்களில் கிடைக்கும் மேலும் ஸ்கொயர் வடிவிலான கேமரா மாட்யுல் பின்புற இடது மூலையில் வழங்கப்படும் Lava Agni 3 கேமராவை பற்றி பேசுகையில் ’50MP OIS’ப்ரைமரி கேமரா சென்சாருடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் வழங்கப்படுகிறது
இந்த போனின் டிஸ்ப்ளே 6.78-இன்ச் HDடிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் இதில் MediaTek Dimensity 7300 SoC ப்ரோசெசர் வழங்கப்படும்
இதனுடன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு ஆகியவற்றைக் காணலாம். ஃபோன் ஆண்ட்ராய்டு 14 உடன் வரலாம். விலையைப் பற்றி பேசுகையில், இது இந்தியாவில் சுமார் ரூ.25 ஆயிரம் விலையில் வரலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:Vivo X Fold 3 Pro யின் கண்ணை கவரும் புதிய கலர் வேரியண்ட் அறிமுகம்