Lava இந்த ஆண்டு மே மாதம் Lava Agni 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனான Lava Agni 2S ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய சாதனம் அடுத்த சில வாரங்களில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ஸ்டர் Yogesh Brar யின் கூற்றுப்படி, அக்னி2S இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த போனை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் ஆகும்.
லாவாவின் வரவிருக்கும் போன் லாவா அக்னி 2 உடன் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு முக்கிய வேரியன்ட் வேறுபட்ட செயலியைப் பயன்படுத்துவதாகும்.
இந்த போன் அறிமுகம் நெருங்கி வருவதால், அதிகாரப்பூர்வ டீசரின் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. லாவா அக்னி 2 5ஜியின் சிறப்பம்சங்களை இதனுடன் பார்ப்போம்.
இந்த லாவா ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. மேலும், இந்த போனில் MediaTek Dimension 7050 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் அக்னி 2எஸ் வேறு சிப்செட்டை உள்ளடக்கியிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :Redmi K70 யின் தகவல் Geekbench யில் லீக் 16GB ரேம் கொண்டிருக்கும்.
போட்டோ எடுப்பதற்காக, அக்னி 2 ஆனது 50MP ப்ரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.