ஜியோபோனிலும் பேஸ்புக் பயன்படுத்தலாம்

Updated on 14-Feb-2018
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த விலை ஜியோபோனில் பேஸ்புக் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ தனது முதல் வோல்ட்இ வசதி கொண்ட \பீச்சர்போனினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்து ஆகஸ்டு மாதத்தில் முன்பதிவை துவங்கியது. ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த ஜியோபோனில் ஜியோ டிவி, ஜியோ மியூசிக் மற்றும் இதர ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியை கொண்டுள்ளது. 

சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜியோபோனில் ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்தும் வசதி தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 14) முதல் ஜியோபோனில் ஃபேஸ்புக் செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். ஜியோபோனில் வழங்கப்பட்டிருக்கும் முதல் மூன்றாம் தரப்பு செயலியாக ஃபேஸ்புக் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜியோபோனிற்கான ஃபேஸ்புக் செயலி ஜியோவின் கை ஓ.எஸ்.-க்கென (KaiOS) பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜியோபோனிலும் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக் அனுபவத்தை பெற முடியும். ஜியோபோனிற்கு ஏற்ப சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டிருப்பதால் விரிவான பேஸ்புக் அனுபவத்தை ஜியோபோன் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது.

ஜியோபோன் சிறப்பம்சங்கள்:

– 2.4 இன்ச் 320×240 பிக்சல் டிஸ்ப்ளே
– 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிரசஸர்
– 512 எம்பி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 2 எம்பி பிரைமரி கேமரா
– 0.3 எம்பி செல்ஃபி கேமரா
– 4G, LED வைபை, ப்ளூடூத்
– USB2.0
– 2000 எம்ஏஎச் பேட்டரி

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் 22 மொழிகளை சப்போர்ட் செய்யும் ஜியோபோனில் வாய்ஸ் கமாண்ட் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஜியோபோனின் பல்வேறு அம்சங்களை குரல் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :