ஜியோ இந்திய சந்தையில் அதன் லேட்டஸ்ட் போன் ஆன JioPhone Prima அறிமுகம் செய்தது, இந்த போன் IMC 2023 யில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோபோன்Prima மற்றும் ஜியோபோன் இரண்டும் வெவ்வேறு போன்கள் என்றாலும், இவை இரண்டிலும் வரும் ப்ரீபெய்ட் திட்டங்களும் வேறுபட்டவை. ஜியோபோன் திட்டங்களுடன் JioPhone Prima ரீசார்ஜ் செய்ய விரும்பினால், உங்களால் அவ்வாறு செய்ய முடியாது.
உங்களிடம் ஜியோபோன் Prima இருந்தால், ரிலையன்ஸ் ஜியோ அவர்களுக்காக தனியாக பிளானை கொண்டு வந்துள்ளது அவை என்ன என்ன என்பதை பார்ர்க்கலாம் வாங்க.
மொத்தம் ஜியோபோன் Prima 4G போனுக்கு 7 ப்ரீ பெய்ட் திட்டங்கள் இருக்கிறது, இந்த திட்டத்தின் விலைகள் பற்றி பார்த்தால் ரூ 75, ரூ 91,ரூ 125,ரூ 152, ரூ 186, ரூ 223, மற்றும் ரூ 895.யில் வருகிறது இதனுடன் இவை அனைத்தும் டேட்டா நன்மைகளுடன் வருகிறது.
ரூ.75 ஜியோ திட்டத்தைப் பற்றி நாம் பேசினால், இந்த திட்டம் 23 நாட்கள் வேலிடிட்டியாகும் 100MB தினசரி டேட்டா + 200MB டேட்டா திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் கிடைக்கும், இந்தத் திட்டம் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றிற்கு 50 SMS உடன் அக்சஸ் வழங்குகிறது.
அதுவே நாம் ஜியோவின் ரூ,91 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இதில் 100MB டேட்டாவிலிருந்து 200MB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 50 SMS நன்மை கிடைக்கும் இதை தவிர இதில் JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மை கிடைக்கும்
ரூ.125 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது தவிர, தினசரி 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 300 SMSஆகியவை இந்த திட்டத்தில் கிடைக்கும். JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான அக்சஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
JioPhone Prima 4Gக்கான ரூ.152 திட்டத்தில் கூட, ரூ.125 திட்டத்தில் உள்ள அதே பலன்களைப் வழங்குகிறது இருப்பினும், இந்த திட்டம் 23 நாட்களுக்கு பதிலாக 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான அக்சஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ரூ.186 திட்டத்தைப் பற்றி பேசினால் இந்த திட்டத்தில் தினமும் 1GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது இந்தத் திட்டமும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, இதை தவிர JioTV, JioCinema, மற்றும் JioCloud.நன்மைகளுடன் வருகிறது.
ஜியோவின் ரூ.223 திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் 100 SMS கிடைக்கும், இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியாகும் இது தவிர, ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோக்ளவுட் ஆகியவை இந்த திட்டத்தில் கிடைக்கும். அக்சஸ் உள்ளது.
இதையும் படிங்க: Airtel யின் அன்லிமிடெட் காலிங் மற்றும் 5G உடன் 3 மாதம் வேலிடிட்டி இருக்கும்
இதன் இறுதி கட்டமாக ரூ,895 திட்டத்தை பற்றி பேசினால், மொத்தம் இதில் 24GB யின் டேட்டா கிடைக்கும் அதாவது தினமும் 2GB டேட்டா கிடைக்கும் அதாவது இந்த நன்மை 28 நாட்களுக்கு இருக்கும்,, மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 50 SMS கிடைக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இதில் 336 நாட்களுக்கு கிடைக்கிறது ஆனால் நீங்கள் அதை 28 நாட்களுக்கு 12 சுழற்சிகளுக்குப் வழங்குகிறது இதை தவிர இதில் கூடுதல் நன்மையாக JioCinema, JioCloud, மற்றும் JioTV. அக்சஸ் உடன் வருகிறது
இந்தத் திட்டங்கள் அனைத்திலும் FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) டேட்டா நுகர்வுக்குப் பிறகு இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது.