JioPhone 2 பிளாஷ் சேல் இன்று பகல் 12;30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது
தனுடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர் விற்பனைக்கு 5 நிமிடத்திற்கு முன்பே ரெடியாக இருந்து கொள்ள வேண்டும் பிளாஷ் சேல் என்பதால்; நொடியில் விற்பனை ஆகிவிடும்.
JioPhone 2 பிளாஷ் சேல் இன்று பகல் 12;30 மணிக்கு Jio.com வெப்சைட்டில் விற்பனைக்கு வருகிறது, இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர் விற்பனைக்கு 5 நிமிடத்திற்கு முன்பே ரெடியாக இருந்து கொள்ள வேண்டும் பிளாஷ் சேல் என்பதால்; நொடியில் விற்பனை ஆகிவிடும்.
இந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.
ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:
– 2.4 இன்ச்,320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
– டூயல் கோர் பிராசஸர்
– 512 எம்பி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 2 எம்பி பிரைமரி கேமரா
– 0.3 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
– 2000 mah பேட்டரி
இந்தியாவில் புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜியோ சார்பில் மான்சூன் ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் ஆப் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவற்றையும் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile