Reliance Jio Bharat B2 இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாக இருக்கிர்கது இருப்பினும் இது குறித்து அந்நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அறிக்கைகள் நம்பப்பட வேண்டும் என்றால், சர்ட்பிகேசன் தளத்தை அடைந்துள்ளது. இது மேம்பட்ட ஃபீச்சர் போனாக இந்தியாவிற்குள் என்ட்ரி கொடுக்க போகிறது. தற்போது இந்த போனின் பெயர் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் இது Jio Bharat B1 யின் சமீபத்திய வெர்சனக மட்டுமே இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
Jio Bharat B1 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனின் விலை 1,299 ரூபாயாக அமேசானில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது Bharat B1 யில் பயனர்களுக்கு 4G கனேக்ட்டிவிட்டி மற்றும் UPI பேமன்ட் அம்சம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தது, இந்த போனில் பல இந்திய மொழிகள் சப்போர்ட் செய்கிறது இதை தவிர இந்த போன் இரண்டு கலர் ஆப்சனில் வருகிறது. ஒரு அறிக்கையின் படி jio யின் புதிய போன் ப் Bureau of Indian Standards (BIS) வெப்சைட் வரை சென்றுள்ளது மேலும் இந்த லிஸ்டிங்கில் வேறு எந்த தகவலும் வெளிவரவில்லை.
தளத்தைப் பார்வையிட்ட பிறகு, போனின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இந்த போன் Jio Bharat B2 என்ற பெயரில் வரப் போவதாக பல செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இது பல சிறந்த சிறப்பம்சங்கள் மற்றும் அம்சங்களைக் கொண்டிருக்கும். இது குறித்து நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. Jio Bharat B2.4 இன்ச் QVGA ரெக்டங்குளர் டிஸ்பிளேவுடன் வருகிறது.
இதையும் படிங்க:Jio யின்புதிய பிளான் அன்லிமிடெட் காலிங் உடன்14 OTT பல நன்மை
இந்த போனில் 2.4-இன்ச் டிஸ்ப்ளே உடன் இந்த போனில் 2000mAh பேட்டரி மற்றும் இதில் டிஜிட்டல் கேமரா இருக்கிறது இந்த போனில் வெறும் jio நெட்வர்க் மட்டுமே கிடைக்கும் மற்றும் இதில் 4G connectivity வசதியும் கொண்டுள்ளது இதை தவிர இந்த போனில் JioCinema, JioSaavn, JioPay,போன்ற நன்மைகளும் பெற முடியும்.