Jio Phone Prima 2 4G போன் இந்தியாவில் அறிமுகம் இதில் என்ன ஸ்பெசல்
Reliance jio அதன் அடுத்த ஜெனரேசன் 4G பீச்சர் போனை இந்தியாவில் அறிமுகம்
இப்போது அதன் வாரிசாக Jio Phone Prima 2 4G கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் YouTube, Facebook, Jio TV, Jio Cinema போன்ற பல ஆப்கள் சப்போர்ட் செய்கின்றன
Reliance jio அதன் அடுத்த ஜெனரேசன் 4G பீச்சர் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது, நிறுவனம் கடந்த ஆண்டு Jio Phone Prima அறிமுகப்படுத்தியது, இப்போது அதன் வாரிசாக Jio Phone Prima 2 4G கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஒரு குறைந்த விலை ஜியோ போனின் இதில் YouTube, Facebook, Jio TV, Jio Cinema போன்ற பல ஆப்கள் சப்போர்ட் செய்கின்றன JioPhone Prima 2 ஆனது கர்வ்ட் டிசைன் மற்றும் பின்புறத்தில் லெதர் போன்ற பினிஷ் கொண்டுள்ளது
Jio Phone Prima 2 4G விலை மற்றும் விற்பனை
Jio Phone Prima 2 4G யின் விலை ரூ, 2799 யில் வருகிறது JioPhone Prima 2 லக்ஸ் ப்ளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Amazon யில் கிடைக்கிறது. விரைவில் இது ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட ரீடைளர் விற்பனைக் கடைகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
JioPhone Prima 2 சிறப்பம்சம்.
Jio Phone Prima 2 4G அம்சம் பற்றி பேசினால் இது ஒரு ஃபீச்சர் போன் என்றாலும், அதன் பயனர்களையும் நன்றாக மகிழ்விக்கிறது. இது குவால்காமின் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் Kai-OS யில் இயங்குகிறது.
இதன் காரணமாக, யூடியூப், பேஸ்புக், ஜியோடிவி, ஜியோசினிமா போன்ற ஆப்கள் ஃபீச்சர் போன்களில் சப்போர்ட் செய்கிறது கூகுளின் வொயிஸ் அசிஸ்டன்ட் இதில் வேலை செய்கிறது. போனில் பின்புறம் மற்றும் செல்ஃபி கேமரா உள்ளது, இது வீடியோ காலிங்கிற்க்கு பயன்படுத்தப்படுகிறது.
JioPhone Prima 2 இன் உதவியுடன், பயனர் UPI பணம் செலுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. பணம் செலுத்துவதற்கு அவர் QR கோடை ஸ்கேன் செய்ய முடியும்.
JioPhone Prima 2 யில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே இருக்கிறது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் குவல்கம் ப்ரோசெசருடன் வருகிறது இதில் 512 எம்பி ரேம், 4ஜிபி உள் சேமிப்பு உள்ளது. SD கார்டு மூலம் சேமிப்பகத்தை 128 ஜிபி வரை விரிவாக்கலாம். நாங்கள் சொன்னது போல், இது பின்புற கேமரா மற்றும் 0.3MP முன் VGA கேமராவைக் கொண்டுள்ளது. LED டார்ச் கிடைக்கிறது.
இது 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் FM ரேடியோ கொண்டுள்ளது. பயனர்கள் அதன் மூலம் JioPay UPI ஐ அணுகலாம். இதில் 2 ஆயிரம் எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் 23 மொழிகளை சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க: Airtel கொண்டு வந்தது 3 புதிய திட்டம் 1 மாத வேலிடிட்டி உடன் பல நன்மை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile