விவோ அதன் புதிய கேமரா போன் Vivo V29 Lite 5G அறிமுகம் செய்துள்ளது, இந்த போனில் 6.78 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹாட்ஸ் ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது 64 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரி மூலம் இந்த போன் ஆதரிக்கப்படுகிறது. ஃபோனில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. போனின் விலை மற்றும் பிற விவரக்குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்…
Vivo V29 Lite 5G ஆனது டார்க் பிளாக் மற்றும் சம்மர் கோல்ட் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு ஸ்டோரேஜ் வேரியண்டில் CZK 8,499 (தோராயமாக ரூ. 31,784) விலையில் வருகிறது. தற்போது, இந்தியாவில் இந்த போன் அறிமுகம் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
விவோவின் புதிய போனில் 6.78 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹாட்ஸ் ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது, இதனுடன் இது 20:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது 300Hz டச் சேம்பளிங் மற்றும் 2160Hz PWM ப்ரொடெக்சன் மற்றும் 1,300 நீட்ஸ் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான FunTouch OS 13 போனில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசெசர் மற்றும் 8 ஜிபி ரேம் வரை போனில் துணைபுரிகிறது. போனில் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரிக்கப்படுகிறது.
போனின் கேமராவை பற்றி பேசினால் இதில் மூன்று பின்கேமரா இருக்கிறது போனில் உள்ள பிரைமரி கேமரா 64 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா. செல்ஃபிக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
ஃபோனின் பேட்டரி பவர் பற்றி பேசுகையில், இது 5,000mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது