Itel புதிய போன் அறிமுகம் செய்ய தயார் இந்த தேதியில் காலத்தில் இறங்கும்

Updated on 05-Jan-2025

itel தனது புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையிலான ஐடெல் Zeno 10 ஐ இந்திய சந்தையில் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனம் Amazon அதன் டீசரில் அதன் விலையை ₹ 5,xxx எனக் காட்டியுள்ளது, இது ரூ. 6,000 க்கும் குறைவாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. நிறுவனத்தின் பிரபலமான A50 சீரிஸ் வெற்றிக்குப் பிறகு இது கொண்டுவரப்படுகிறது.

itel Zeno 10 டீசர்

itel Zeno 10 இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் மற்றும் அதே நாளில் இருந்து Amazon.in யில் வாங்குவதற்கு கிடைக்கும். குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை விரும்பும் கஸ்டமர்களுக்காக இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

itel Zeno 10 அம்சம்

itel Zeno 10 அதன் கவர்ச்சிகரமான Zenithal டிஸைனுடன் வரும். இதில் பின் பேனலில் அலை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு கலர் விருப்பங்களில் கிடைக்கும். இந்த போனில் 6.6 இன்ச் HD + IPS டிஸ்ப்ளே இருக்கும். இதில் டைனமிக் பார் அம்சம் இருக்கும்.

பார்போமான்ஸ் பற்றி பேசுகையில், இந்த போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்படும், இது வேரஜுவல் ரேம் மூலம் 8 ஜிபி வரை விரிவாக்கப்படலாம். இதனுடன், 64 ஜிபி உள் ஸ்டோரேஜ் சப்போர்ட் கிடைக்கும். அதே நேரத்தில் ப்ரோசெசர் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

itel Zeno 10 (1)

itel Zeno 10 போட்டோ எடுப்பதற்காக 8MP AI இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது போர்ட்ரெய்ட் மோட், HDR , ப்ரோ மோட், பனோரமா மற்றும் ஸ்லோ மோஷன் போன்ற அம்சங்களை சப்போர்ட் செய்யும் . அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 5MP முன் கேமரா கிடைக்கும்.

பேட்டரியைப் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 5000mAh பேட்டரியுடன் வரும், இது சார்ஜ் செய்வதற்கு USB Type-C போர்ட்டின் சப்போர்ட்டை கொண்டிருக்கும்.

Moto யின் புதிய போனை களத்தில் இறங்க தயார் செய்துள்ளது இந்த தேதியில் அறிமுகமாகும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :