digit zero1 awards

itel S24 ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் டாப் அம்சம் பாருங்க

itel S24 ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் டாப் அம்சம் பாருங்க
HIGHLIGHTS

Itel அதன் புதிய ஸ்மார்ட்போன் itel S24 இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

itel S24 ஆனது 6.6-இன்ச் HD+ பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது

itel S24 யின் விலை ரூ.9999 என கூறப்படுகிறது

Itel அதன் புதிய ஸ்மார்ட்போன் itel S24 இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிட் ரேஞ்சில் வருகிறது மற்றும் பல சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது! itel S24 ஆனது 6.6-இன்ச் HD+ பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 90Hz ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது, இந்த போனில் டைனமிக் பார் வசதி உள்ளது, இதை நாம் பல ஐடெல் போன்களில் பார்த்திருக்கிறோம். முக்கிய நோட்டிபிகேசன் டைனமிக் பட்டியில் தனித்தனியாக ஹைலைட் செய்யப்படுகின்றன, மேலும் பேட்டரி ஸ்டேட்டண்டர்ட் மற்றும் இன்கம்மிங் கால்கள் பற்றிய தகவல்களும் கிடைக்கும்.

itel S24 Price in India

itel S24 யின் விலை ரூ.9999 என கூறப்படுகிறது. இது ஸ்டார்ரி பிளாக் மற்றும் டான் ஒயிட் கலர்களில் கிடைக்கும். அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது, அதன் விலை ரூ.10999 என பட்டியலிடப்பட்டுள்ளது. 999 மதிப்புள்ள Itel 42 Smartwatch போனுடன் இலவசமாக வழங்கப்படுகிறது.

itel S24 டாப் சிறப்பம்சங்கள்

itel S24 டிஸ்ப்ளே

itel S24 யின் இரண்டு வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இதில் டான் ஒயிட் வேரியண்ட் நிறத்தை மாற்றும் பவரை கொண்டுள்ளது. ஃபோனில் 6.6-இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது, அதன் ரேசளுசன் 1612 x 720 பிக்சல்கள் மற்றும் ப்ரைட்னஸ் 480 nits ஆகும்.

itel S24 ப்ரோசெசர்

itel S24 யின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் MediaTek யின் Helio G91 ப்ரோசெசர் கொண்டுள்ளது மேலும் இதில் 8 ஜிபி ரேம் உள்ளது, அதை 8 ஜிபி வரை எக்ச்டன்ட் செய்யலாம்மற்றும் இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 128 ஜிபி. இருக்கிறது

கேமரா

itel S24 யின் கேமராபற்றி பேசினால், இந்த போனில் 108MP Samsung HM6 ISOCELL சென்சார் உள்ளது. மேலும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. LEDப்ளாஷ் வசதியும் உள்ளது. முன் கேமரா 8 மெகாபிக்சல். இருக்கிறது.

பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

itel S24 ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 18W டைப் C பாஸ்ட் சார்ஜினை சப்போர்ட் செய்கிறது இந்த ஃபோன் Android 13 OS யில் இயங்குகிறது, இதில் itel இன் OS 13.5 லேயர் உள்ளது. மற்ற அம்சங்களாக, இந்த ஃபோன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார், டூயல் ஸ்பீக்கர்கள், FM ரேடியோ ஆகியவற்றுடன் வருகிறது. எடை 194 கிராம். இருப்பினும் இது 5ஜி ஸ்மார்ட்போன் இல்லை.

இதையும் படிங்க:BSNL வெறும் ரூ,197 யில் கிடைக்கும் 70 நாட்கள் வேலிடிட்டி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo