Itel இந்தியாவில் முதல் முறையாக Type-C சார்ஜ் போர்ட் கொண்ட பீச்சர் போன் கொண்டு வந்துள்ளது

Itel இந்தியாவில் முதல் முறையாக Type-C சார்ஜ் போர்ட் கொண்ட பீச்சர் போன் கொண்டு வந்துள்ளது
HIGHLIGHTS

Itel Power 450 இந்தியாவில் சமீபத்திய கீபேட் ஃபீச்சர் போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10,000 ரூபாய்க்குள் 5G போன்களை அறிமுகப்படுத்திய முதல் பிராண்டுகளில் ஒன்றாகும்

இப்போது நாட்டில் ரூ.1500க்கு கீழ் USB-C சப்போர்த்டுடன் கூடிய முதல் ஃபீச்சர் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Itel Power 450 இந்தியாவில் சமீபத்திய கீபேட் ஃபீச்சர் போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சக்திவாய்ந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வழங்குவதில் பிரபலமானது மற்றும் இந்தியாவில் 10,000 ரூபாய்க்குள் 5G சாதனங்களை அறிமுகப்படுத்திய முதல் பிராண்டுகளில் ஒன்றாகும். இப்போது நாட்டில் ரூ.1500க்கு கீழ் USB-C சப்போர்த்டுடன் கூடிய முதல் ஃபீச்சர் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Itel Power 450 இந்திய விலை

ஐடெல் இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் கீபெட் பீச்சர்போனை மூன்று கலரில் அறிமுகம் செய்தது,, அவை டீப் ப்ளூ தரக் கிரே மற்றும் லைட் கிரீன் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இப்போது இந்த போனை நாட்டின் முன்னணி ரீடைலர் விற்பனைக் கடைகளில் வாங்கலாம். இந்த போனின் விலை ரூ.1,449 ஆக வைக்கப்பட்டுள்ளது, இது முந்தைய போன் பவர் 440 போலவே இருந்தது.

Power 450 சிறப்பம்சங்கள்

Itel Power 450 சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இதில் இது முற்றிலும் கடந்த Power 440 போலவே இருக்கிறது,, முன்பு போலவே, புதிய போனிலும் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கீழே T9 கீபேட் உள்ளது. இது நடுவில் ஒரு பெரிய பிளாஷ் லைட் பட்டன் மற்றும் நேவிகேசன் மற்றும் காலிங் பட்டன்களுடன் டி-பேட் உள்ளது.

இருப்பினும், பிராண்ட் அதன் பின்புற பேனல் டிசைன் அப்டேட் செய்துள்ளது இந்த முறை ஸ்பீக்கர் கிரில்லுக்கான தனி கட்அவுட் மற்றும் டிஜிட்டல் கேமரா மாட்யுல் ஒரு சதுர ஐலேன்ட் உள்ளது.

இந்த புதிய போனின் மிகப்பெரிய அம்சம் அதன் USB-C சார்ஜிங் போர்ட் ஆகும், இது உலகளாவிய சார்ஜிங் ச்டேட்டர்ட் இந்தியாவின் முதல் கீபேட் ஃபோனை உருவாக்குகிறது. இந்த ஃபோனில் 2500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 15 நாட்கள் ச்டேட்டர்ட் பேக்கப் மற்றும் 20 மணிநேர டாக் டைம் வழங்குகிறது. இதன் ஸ்க்ரீனனது மூலையிலிருந்து மூலைக்கு 2.4 இன்ச்கள் மற்றும் QVGA (320 x 240 பிக்சல்கள்) ரேசளுசனை வழங்குகிறது.

இதையும் படிங்க: Jio கஸ்டமர்களுக்கு இந்த இரு ப்ரீ பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் டேட்டா

இதில் மீடியாடேக் MTK6261D ப்ரோசெச்சரில் இயங்குகிறது, இது 8MP ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பிராண்டின் சொந்த ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது. ஃபோன் 13.4mm மெல்லியதாகவும், பின்புற டிஜிட்டல் கேமரா, டார்ச், இந்தி/ஆங்கில சப்போர்ட்டுடன் கிங் வாய்ஸ் ஸ்பீச்-டு-டெக்ஸ்ட் ஆப்ஸ், வயர்லெஸ் எஃப்எம், 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றுடன் வருகிறது. இது தவிர, இந்த போன் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம் மற்றும் பஞ்சாபி ஆகிய ஒன்பது மொழிகளை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo