Itel உலகின் முதல் Android 14 Go Edition போனை அறிமுகம் செய்துள்ளது

Itel உலகின் முதல் Android 14 Go Edition போனை அறிமுகம் செய்துள்ளது
HIGHLIGHTS

Itel P55T இது சீன ஸ்மார்ட்போன் பிராண்டின் சமீபத்திய என்ட்ரி லெவல் சலுகையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய போன் Unisoc ப்ரோசெசரில் இயங்குகிறது

P55T ஆனது டிஸ்ப்ளேவில் ஐபோன் இந்த புதிய போனின் விலை, மற்றும் பல சிறப்பம்சங்களின் தகவல் பற்றி பார்க்கலாம்.

Itel P55T ஸ்மார்ட்போன் இது சீன ஸ்மார்ட்போன் பிராண்டின் சமீபத்திய என்ட்ரி லெவல் சலுகையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய போன் Unisoc ப்ரோசெசரில் இயங்குகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற ஐடெல் போன்களைப் போலவே, P55T ஆனது டிஸ்ப்ளேவில் ஐபோன் இந்த புதிய போனின் விலை, மற்றும் பல சிறப்பம்சங்களின் தகவல் பற்றி பார்க்கலாம்.

Itel P55T விலை மற்றும் விற்பனை

Itel P55T யின் விலை 8,199 ரூபாயாக இருக்கிறது, இதன் 4GB + 128GB மாடலை வாங்கலாம் மற்றும் இது Flipkart யில் கிடைக்கும் இந்த போன் பிரில்லியன்ட் கோல்ட், அரோரா புளூ மற்றும் மூன்லைட் பிளாக் கலர் விருப்பங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

P55T சிறப்பம்சம்

Itel P55T பார்ப்பதற்கு iPhone Pro போல் இருக்கிறது என்று பேச்சு வருகிறது, ஐடெளின் பல ஸ்மார்ட்போன்களில் இதே போன்று இருக்கிறது, நாம் குறிப்பிட்டுள்ளபடி, ஆண்ட்ராய்டு 14 கோ பதிப்பில் இயங்கும் முதல் போன் இதுவாகும். ஃபோனில் 6.6-இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உள்ளது, இது HD பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்தை வழங்குகிறது.

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Unisoc T606 ப்ரோசெசர் இருக்கிறது, இந்த போனை பார்க்கும்போது இந்த ஃபோனில் மூன்று பின்புற கேமராக்கள் இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் 50 எம்பி ப்ரைமரி கேமரா சென்சார் மட்டுமே தெரியும். இதனுடன், இந்த போனில் AI சென்சார் மற்றும் LED லைட் உள்ளது. போனில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது செம்ம அம்சம் இனி சர்ச் செய்வது ஆகும் செம்ம ஈசி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில், Itel P55T 6 ஆயிரம் mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 18 வாட் வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இந்த போனில் உள்ள கனெக்டிவிட்டி விருப்பங்கள் 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிஎன்எஸ்எஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட். ஆகியவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo