குறைந்த விலையில் 5G கிடைத்தால் நன்றாக இருக்கும் என மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்க்கப்படுகிறது, Transsion Holdings (Infinix மற்றும் Tecno ஆகியவற்றின் தாய் நிறுவனம்) சொந்தமான குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Itel ஆனது, Itel P55 என குறியீட்டுப் பெயரில் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. 10,000 ரூபாய்க்குள் நாட்டிலேயே முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை Itel இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இது பயனர்களுக்கு 5G போனாக கொண்டுவரும் என்று தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் 10,000 ரூபாய்க்குள் கிடைக்கும் நல்ல ஸ்மார்ட்போன்கள் பல 5G போன் அதிகம் இல்லை Redmiமற்றும் Poco யிலிருந்து சில ஸ்மார்ட்போன்களை மட்டுமே நீங்கள் தேர்வு செய்ய முடியும். இருப்பினும், Galaxy F04 மற்றும் Galaxy M13 போன்ற சில சாம்சங் போன்களும் இந்த ரேஞ்சில் கிடைக்கின்றன, ஆனால் அவை எதுவும் 5G சப்போர்ட் கிடைப்பதில்லை Itel P55 யில் நீங்கள் இந்த மாற்றத்தை பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் என்ன சிறப்பம்சங்கள் கொண்டு வரும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இங்கு பிராண்டால் ஷேர் செய்யய்யப்பட்ட டீஸர் படத்தில், போனில் பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டிங் இருப்பதை காணலாம், ஆனால் இதைத் தவிர வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. பட்ஜெட் ஃபோனாக இருப்பதால், Itel P55 ஆனது லோ எண்டு யுனிசாக் ப்ரோசெசர் கொடுக்கலாம் மற்றும் 5000mAh பேட்டரியையும் போனில் இருக்கலாம் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Itel P55 ஸ்மார்ட்போனில் Itel S23+ க்குப் பிறகு நிறுவனத்தின் அடுத்த சாதனம் Itel P55 ஸ்மார்ட்போன் ஆகும். Itel S23+ ஆனது 59 டிகிரி வளைவுடன் வரும் 6.78-inch FHD+ AMOLED கர்வ்ட் டிஸ்ப்ளேவுடன் இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன்Unisoc T616 (12nm) ப்ரோசெசர் 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 2.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. Itel S23+ ஸ்மார்ட்போனில் 18W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, இந்த போனின் பின்புறத்தில் 50MP ப்ரைமரி கேமரா செட்டிங் உள்ளது