digit zero1 awards

ஐடெல் இந்தியாவில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது…!

ஐடெல் இந்தியாவில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது…!
HIGHLIGHTS

ஐடெல் A 22, A 22 ப்ரோ மற்றும் A 45 என்ற பெயர்களில் அறிமுகமாகி இருக்கிறது. மூன்று புதிய ஸ்மார்ட்போன்களிலும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது

ஐடெல் A 22, A 22 ப்ரோ மற்றும் A 45 என்ற பெயர்களில் அறிமுகமாகி இருக்கிறது. மூன்று புதிய ஸ்மார்ட்போன்களிலும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐடெல் ஏ45 மாடலில் 5.45 இன்ச் HD பிளஸ் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் பிங்காரப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ஐடெல் ஏ22 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட், ஏ45 மாடலில் மீடியாடெக் MT6739 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஏ22 மற்ரும் ஏ45 மாடல்களில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ பிளாட்போர்ம் (கோ எடிஷன்) மற்றும் A 22 ப்ரோ மாடலில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ பிளாட்போர்ம் வழங்கப்பட்டுள்ளது.

Itel A 45 சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739WA 64-பிட் பிராசஸர்
– பவர் விஆர் ரோக் GE8100 GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 5 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– விஜிஏ இரண்டாவது கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2700 Mah  பேட்டரி

Itel ஏ22 / ஏ22 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 5-இன்ச் 480×960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர்
– அட்ரினோ 304 GPU
– 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி – ஏ22
– 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி – ஏ22 ப்ரோ
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) – ஏ22
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ – ஏ22 ப்ரோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 5 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2400 Mah . பேட்டரி

ஐடெல் ஏ45 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஆந்த்ராசைட் கிரே மற்றும் ரோஸ் கோல்டு கலர்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஐடெல் A45 விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடெல் A 22 மாடல் ஸ்பேஸ் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Itel ஏ22 ப்ரோ போர்டாக்ஸ் ரெட், ஷேம்பெயின் கோல்டு மற்றும் மேட் பிளாஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று புதிய ஐடெல் ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுக்கு உடனடி கேஷ்பேக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.2,200 மதிப்புடைய கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo