itel ரூ,1499 யில் பீச்சர் போன் அறிமுகம் செய்துள்ளது, FM ரேடியோ சப்போர்ட் இருக்கும்

Updated on 20-Dec-2023
HIGHLIGHTS

itelநிறுவனம், இந்திய சந்தையில் புதிய ஃபீச்சர் போனை அறிமுகப்படுத்தியுள்ளது

அதன் பெயர்- it5330. நிறுவனம் இந்த போனை ரூ.1500க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ப்ளூ லைட் க்ரீன், லைட் ப்ளூ மற்றும் ப்ளாக் கலர் விருப்பங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது

குறைந்த விலை போன்களை விற்பனை செய்வதில் பிரபலமான itel நிறுவனம், இந்திய சந்தையில் புதிய ஃபீச்சர் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர்- it5330. நிறுவனம் இந்த போனை ரூ.1500க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் பல இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் மற்றும் FM அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள் மட்டுமின்றி டிசைனிலும் it5330 அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இன்னும் தனிப்பட்ட கேஜெட் இல்லாத பயனர்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறது. அருகிலுள்ள ரீடைலர் விற்பனைக் கடைகளில் போனை வாங்கலாம்.

Itel it5330 விலை தகவல்

இந்தியாவில் Itel it5330 யின் விலை 1499 ரூபாய். இது ப்ளூ லைட் க்ரீன், லைட் ப்ளூ மற்றும் ப்ளாக் கலர் விருப்பங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. போனை அருகிலுள்ள ரீடைலர் விற்பனைக் கடையில் வாங்கலாம்.

ஐடெல் it5330 சிறப்பம்சம்

Itel it5330 2.8 இன்ச் கலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது இந்த பிரிவிலும் இந்த விலை ரேஞ்சில் ஒரு பெரிய அம்சமாகும். இந்த ஃபோனில் 1900mAh பேட்டரி உள்ளது, இது 31.7 மணிநேர டாக் டைமையும் 12 நாட்கள் பெக்கபை தருகிறது என்று நிறுவனம் கூறுகிறது, அதாவது போனின் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும். 32 ஜிபி வரையிலான SD கார்டையும் போனில் போட முடியும் அதாவது இந்த போனில் நிறைய மல்டிமீடியா கண்டெண்டை நீங்கள் அனுபவிக்க முடியும்.

இந்திய பயனர்களின் தேவைக்கேற்ப இந்த போனை ஐடெல் தயாரித்துள்ளது. இன்றும் ஆங்கிலம் சாதாரண இந்தியரின் மொழி அல்ல. அதனால்தான் it5330 இந்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட 9 மொழிகளை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க : Nubia Z60 Ultra ஸ்மார்ட்போன் 120Hz OLED டிஸ்ப்ளே உடன் அறிமுகம்

இந்த போனில் FM கொடுக்கப்பட்டுள்ளது, வயர்டு ஹெட்ஃபோன்கள் இல்லாமலேயே இந்தச் போனில் FM இயக்க முடியும். இந்த போனில் ரெக்கார்டரும் உள்ளது. இது தவிர, இந்த போனில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது, இதன் மூலம் உங்கள் வயர்டு ஹெட்ஃபோன்களை இணைக்க முடியும். இந்த போனில் 2 சிம் ஸ்லாட்டுகள் மற்றும் VGA கேமராவும் உள்ளது. It5330 ஆட்டோ கால் ரெக்கார்டிங் வசதியையும் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :