itel A70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது, இந்த போன் சில காலத்திற்கு முன்பு உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்பொழுது இது இந்தியாவில் என்ட்ரி கொடுத்துள்ளது .itel A70 ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும், இதை Amazon மூலம் வாங்கலாம். 5 ஆயிரம் MAH பேட்டரி, LCD டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம் மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா போன்ற அம்சங்களுடன் இந்த சாதனத்தை நிறுவனம் பேக் செய்துள்ளது itel A70 தொடர்பான ஒவ்வொரு தகவலையும் தெளிவாக பார்க்கலாம் வாங்க.
itel A70 யின் 3 ஸ்டோரேஜ் கொண்டு வந்துள்ளது, இதன் 4GB + 64GB மாடலின் விலை 6,299 ரூபாயாகும், இதில் 800 பேங்க் சலுகையும் இதில் அடங்கும். 4ஜிபி + 256ஜிபி மாடலை ரூ.7,299க்கு வாங்கலாம். ஃபீல்ட் கிரீன், ப்ளூ, ப்ரில்லியன்ட் கோல்ட் மற்றும் ஸ்டார்லிஷ் பிளாக் கலரில் ஜனவரி 5 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் அமேசானில் போனை பெறலாம்.
itel A70 யில் 6.6 இன்ச் யில் LCD HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரேசளுசன் 720 × 1612 பிக்சல் இருக்கிறது, மற்றும் 500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் இருக்கிறது. டைனமிக் பார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட்டை ஆதரிக்கிறது.
itel A70 ஸ்மார்ட்போனில் UniSoC T603 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் 4GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் இருக்கிறது. SD கார்ட் வழியாக இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும்
இதையும் படிங்க: Poco M6 Pro 4G ஜனவரி 11 அறிமுகமாகும், விலை சிறப்பம்சம் தெருஞ்சிகொங்க
இது Go Edition யில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் itel யின் OS 13 லேயர் உள்ளது, இதில் Android 13 யில் வேலை செய்கிறது.
itel A70 ஆனது 13-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது, இது AI லென்ஸ் மற்றும் LED ஃபிளாஷ் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
போனில் 5000 mAh பேட்டரி உள்ளது, இது டைப்-சி போர்ட் மூலம் நிரப்பப்படுகிறது. செக்யுரிட்டிகாக இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்க்கெனருடன் வருகிறது மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியையும் கொண்டுள்ளது.