ஐடெல் தொடர்ந்து பல புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது, இப்போது இந்த நிறுவனம் Itel A05s என்ற A சீரிச்ன் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு என்ட்ரி லெவல் போனகும் இது நிறைய சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஹார்ட்வேர் வழங்குகிறது. இதில் LED ஸ்க்ரீன் இரட்டை கேமரா லென்ஸ் மற்றும் பெரிய பேட்டரி உள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் மாற்ற தகவல்களை தெளிவாக பார்க்கலாம்.
ஐடெல் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் LCD பேனலுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது HD+ ரெசல்யூஷன், 270 ppi பிக்சல் ப்ரைட்னாஸ் மற்றும் 60Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது.
இந்த போனில் Unisoc SC9863A octa-core ப்ரோசெசருடன் உள்ளது, இது 2GB RAM மற்றும் 32GB வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாகவும் இதன் ஸ்டோரேஜெ அதிகரிக்கலாம் மேலும் இந்த போன ஆண்ட்ராய்டு 13 Go ஸ்கின் மூலம் இயங்குகிறது
கேமராவை பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5எம்பி பிரைமரி ஷூட்டர் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 5எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.
பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் 4000mAh பேட்டரியுடன் வருகிறது.
இந்த ஃபோனில் சார்ஜ் மற்றும் கனேக்டிவிட்டிக்கு USB-C போர்ட் உள்ளது. இது 7.5 மணிநேர டாக் டைமை 32 நாட்கள் வரை பேக்கப் நேரத்தையும் வழங்குகிறது. இரட்டை சிம், 4G VoLTE, WiFi, Bluetooth, GPS மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவையும் இந்த போனில் உள்ளன.
இந்த ஐடலின் போன் இந்திய இணையதளத்தில் ரூ.6,499 விலையில் கிடைக்கிறது. இந்த போன் நெபுலா பிளாக், மெடோ கிரீன், கிரிஸ்டல் ப்ளூ மற்றும் க்ளோரியஸ் ஆரஞ்சு ஆகிய நான்கு நிறங்களின் விருப்பங்களில் வருகிறது.
இதையும் படிங்க: Amazon Sale Samsung Galaxy போனில் 20 ஆயிரம் வரை தள்ளுபடி