6000mAh பேட்டரி கொண்ட iQOO Z9x 5G போனில் அதிரடி டிஸ்கவுன்ட்

Updated on 08-Nov-2024
HIGHLIGHTS

iQOO Z9x 5G ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ,12,499க்கு list செய்யப்பட்டுள்ளது,

தற்பொழுது இந்த போனில் அமேசானில் மிக சிறந்த ஆபர் சலுகை வழங்கப்படுகிறது

நீங்கள் இதை வெறும் ரூ.10,749க்கு வாங்கி செல்லலாம்

iQOO Z9x 5G சமிபத்தில் இந்த போனை அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து தற்பொழுது இந்த போனில் அமேசானில் மிக சிறந்த ஆபர் சலுகை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் பேங்க் ஆபர் என பல அதிரடியான ஆபருடன் இதை வாங்கலாம் மேலும் நீங்கள் அமேசானில் ஆபர் மூலம் வாங்கினால் நீங்கள் இதை வெறும் ரூ.10,749க்கு வாங்கி செல்லலாம் அது எப்படி என முழுசா பார்ப்போம் வாங்க.

iQOO Z9x 5G ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட்

உண்மையில் iQOO Z9x 5G ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ,12,499க்கு list செய்யப்பட்டுள்ளது, அதன் ஆரம்ப 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் ரூ,13,999 மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,15,499க்கும் list செய்யப்பட்டுள்ளது.

iQOO Z9x 5G Amazon Deal

ஆனால் நீங்கள் HDFC பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ.1250 வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படும், மேலும் அமேசானில் ரூ.500 இலவச கூப்பனும் வழங்கப்படுகிறது இதன் மூலம் நீங்கள் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் போனை வெறும் ரூ,10,749க்கு வாங்கலாம்.

இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனை கொடுத்து வாங்கினால் ரூ.11,850 வரை எக்ஸ்சேஞ் ஆபரில் வாங்கலாம்.மேலும் உங்களின் போன் நல்ல கண்டிசனில் இருக்க வேண்டும் அதாவது இந்த எக்ஸ்சேஞ் ஆபர் உங்களின் பழைய போனின் நிலையை பொருத்து மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI ஆப்சன் மூலம் மாதந்திரம் ரூ.703 EMI விருப்பத்தில் வாங்கலாம்.

iQOO Z9x 5G சிறப்பம்சங்கள்.

iQOO Z9x 5G ஸ்மார்ட்போன் பெரிய 6.72 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் வருகிறது. இந்த போனில் அதிகபட்சமாக 1000 nits ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 6 Gen 1 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அவுட் பாக்ஸிலும் வேலை செய்கிறது.

iQOO Z9x 5G ஸ்மார்ட்போன் உங்களுக்கு இரட்டை பின்புற கேமரா செட்டிங் பெறுகிறது. இது 50MP ப்ரைமரி கேமராவுடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக 8எம்பி கேமராவும் உள்ளது. மேலும், iQOO Z9x 5G ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

இதையும் படிங்க: Best Deal:iPhone16 Pro யில் இதுவரை இல்லாத அளவுக்கு சூப்பர் ஆபர் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :