iQOO Z9s Series மிகவும் பவர் புல் ஸ்மார்ட்போன் ஆன அடுத்த மாதம் என்ட்ரி

Updated on 24-Jul-2024
HIGHLIGHTS

விவோவின் சப் பிராண்ட் பிராண்ட் திங்களன்று நாட்டில் iQOO Z9s சீரிஸின் வருகையை உறுதிப்படுத்தியது

நிறுவனம் iQOO Z9s தொடரை மட்டுமே குறிப்பிட்டிருந்தாலும், இந்த வரிசையில் இரண்டு மாடல்கள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

iQOO Z9 Lite 5G அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

iQOO இந்தியாவில் புதிய Z சீரிசை அறிமுகப்படுத்துகிறது. விவோவின் சப் பிராண்ட் பிராண்ட் திங்களன்று நாட்டில் iQOO Z9s சீரிஸின் வருகையை உறுதிப்படுத்தியது. நிறுவனம் iQOO Z9s தொடரை மட்டுமே குறிப்பிட்டிருந்தாலும், இந்த வரிசையில் இரண்டு மாடல்கள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்டுடன் வரும் iQOO Z9 Lite 5G அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. தற்போது, ​​நிறுவனம் அதன் Z தொடரில் iQoo Z9 Turbo, iQoo Z9, iQoo Z9x மற்றும் iQoo Z9x 5G போன்ற பல மாடல்களை வழங்குகிறது.

iQOO Z9s சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்.

iQOO இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மரியா, இந்தியாவில் iQOO Z9s சீரிசின் ன் வெளியீட்டை இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் டீஸ் செய்துள்ளார். மரியா சரியான வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை, ஆனால் இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த போஸ்ட் போனின் பின்புற டிசைனை காட்டுகிறது. இந்த போனில் ஒரு வேற்டிக்கல் வடிவ பின்புற கேமரா மாடியுளுடன் காணப்படுகிறது, அதில் மூன்று கேமராக்கள் மற்றும் ஒரு ரிங் வடிவ LED லைட் உள்ளது. இப்போது கிடைக்கும் அனைத்து iQOO Z9 போன்களிலும் இரட்டை பின்புற கேமராக்கள் உள்ளன.

iQOO Z9s இன் பின்புற டிசைன் iQOO Z9 5G மற்றும் iQOO Z9x 5G போன்றது, இது இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரவிருக்கும் லைனில் குறைந்தபட்சம் iQOO Z9s மற்றும் iQOO Z9s Pro ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெண்ணிலா iQOO Z9 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.19,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. iQOO Z9 5G ஆனது MediaTek Dimensity 7200 5G SoC மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் iQOO Z9x 5G ஆனது Snapdragon 6 Gen 1 ப்ரோசெசரி கொண்டுள்ளது. இருப்பினும், இரண்டு போன்களிலும் 50MP இரட்டை பின்புற கேமரா மாட்யுல் மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

iQOO Z9 Turbo யில் ரீப்ரண்டேட் ஆகா இருக்கும்

சில அறிக்கைகள் iQOO Z9s தொடர் iQOO Z9 Turbo இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம், இது முன்னர் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது உண்மையாக இருந்தால், iQOO Z9 Turbo மாடல் Z தொடரில் மிகவும் சக்திவாய்ந்த போனாக இருக்கும்.

#iQOO-Z9-Turbo

அறியாதவர்களுக்கு, iQOO Z9 Turboவின் சீன மாறுபாடு Qualcomm Snapdragon 8s Gen 3 சிப்செட், ஒரு பிரத்யேக GPU மற்றும் 6K லிக்யுட் கூலிங் சேம்பர் உடன் வருகிறது. கேமரகளுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாகும். இதன் சீன வேரியன்ட் 6000mAh பேட்டரியுடன் வருகிறது. அதன் இந்திய வெர்சன் இதே போன்ற சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டால், அது திடமான பர்போமான்ஸ் மையமான போனாக இருக்கும்.

அதன் கேமரா விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், இது ஃபிளாஷ் கொண்ட இரண்டு லென்ஸ்களுடன் வருகிறது. சாதனத்தின் கூடுதல் விவரங்களை அறிய, இந்திய சந்தையில் அதன் வெளியீட்டிற்கு நாம் காத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க:Nio Phone 2 AI அம்சத்துடன் ஜூலை 27 அறிமுகமாகும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :