iQOO இந்த போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது ஆபர் என்ன இருக்கு

iQOO இந்த போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது ஆபர் என்ன இருக்கு
HIGHLIGHTS

iQOO Z9s Pro சமீபத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது

iQOO Z9s ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று மெமரி கான்பிக்ரேசனுடன் வருகிறது,

இந்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. போனை Amazon India மற்றும் iQoo இன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வாங்கலாம்.

iQOO Z9s Pro என்பது நிறுவனத்தின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் வரிசைக்கு ஒரு புதிய கூடுதலாகும், இதன் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது Z9s Pro சமீபத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இன்று முதல் முறையாக விற்பனையில் வாங்குவதற்கு கிடைக்கும். இது iQOO இன் மிகவும் சக்திவாய்ந்த மிட் ரேன்ஜ் போன் என கூறுகிறது மேலும் இந்த போனை எங்கு மற்றும் விற்பனை ஆபர் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

iQOO Z9s Pro யின் இந்திய விலை தகவல்

iQOO Z9s ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று மெமரி கான்பிக்ரேசனுடன் வருகிறது, இதில் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.24,999, அதே சமயம் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.26,999 மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியன்ட் விலை ரூ.9999. ஆகும்.

அறிமுக சலுகையாக இந்த போனில் பேங்க் ஆபரக ICICI மற்றும் HDFC கிரெடிட் /டெபிட் கார்ட் மற்றும் EMI மூலம் வாங்கினால் 3000ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 3000 வரை எக்ச்ச்சஞ் ஆபரின் நன்மையும் பெறலாம். இந்த சலுகைகளைப் பெறுவதன் மூலம், ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.21,999 ஆக குறையும். இங்கே வாங்குபவர்கள் 6 மாதங்கள் வரை விலையில்லா EMI விருப்பத்தையும் பெறுவார்கள். இந்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த போனை Amazon India மற்றும் iQoo இன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வாங்கலாம்.

iQOO Z9s Pro சிறப்பம்சம்.

ஐகூ Z9s Pro ஆகியவை 6.7 இன்ச் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. இது FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது. Z9s Pro ஆனது 4,500 nits யின் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது,

இந்த போனில் Snapdragon 7 Gen 3 5G ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது, இது 12GB வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் விருப்பங்களில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் அடங்கும். Z9s Pro ஆனது ஒரு பெரிய 5500mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது நீண்ட நேரம் நீடிக்கும் மற்றும் 80W வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

இதன் மெயின் கேமரா 50MP சோனி IMX882 ஆகும். இது OIS ஐ சப்போர்டுடன் வருகிறது போனில் 2எம்பி போர்ட்ரெய்ட் கேமராவும் உள்ளது, 8MP அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. இந்த போன்களில் AI எரேசர் AI போட்டோவை மேம்படுத்தும் அம்சம் போன்ற AI அம்சங்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது. செல்பிக்கு இந்த போனில் 16 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

இந்த போனில் 5,500எம்ஏஎச் பேட்டரியுடன் Z9s Pro 80W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன்கள் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14ல் இயங்குகின்றன.

இதையும் படிங்க: VI யின் இந்த திட்டத்தில் குறைந்த விலையில் OTT நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo