iQOO Z9s இன்று முதல் முறையாக விற்பனை டிஸ்கவுன்ட் ஆபர் தெருஞ்சிகொங்க

iQOO Z9s இன்று முதல் முறையாக விற்பனை டிஸ்கவுன்ட் ஆபர் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

iQOO Z9s ஸ்மார்ட்போன் இப்பொழுது சமிபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது,

iQOO Z9s யின் முதல் விற்பனை இன்று அதாவது ஆகஸ்ட் 29 அன்று. அமேசானில் இருந்து இந்த போனை வாங்க முடியும்.

iQOO Z9s போன் 128ஜிபி மாடலில் ரூ.19,999க்கு வெளியிடப்பட்டது, இது தவிர, 256ஜிபி மாடல் 8ஜிபி ரேம் உடன் ரூ.21,999க்கு வருகிறது

iQOO Z9s ஸ்மார்ட்போன் இப்பொழுது சமிபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து இதன் விற்பனை இன்று நடைபெறுகிறது அதாவது iQOO Z9s யின் முதல் விற்பனை இன்று அதாவது ஆகஸ்ட் 29 அன்று. அமேசானில் இருந்து இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போனிளிருக்கும் ஆபர் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க

iQOO Z9s யின் விலை மற்றும் ஆபர்

iQOO Z9s போன் 128ஜிபி மாடலில் ரூ.19,999க்கு வெளியிடப்பட்டது, இது தவிர, 256ஜிபி மாடல் 8ஜிபி ரேம் உடன் ரூ.21,999க்கு வருகிறது. இது தவிர, 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.23,999க்கு வாங்கலாம். இந்த போனை ஓனிக்ஸ் கிரீன் மற்றும் டைட்டானியம் மேட் கலர்களில் வருகிறது.

இதன் அறிமுக சலுகை பற்றி பேசினால், நீங்கள் iQOO Z9s ஸ்மார்ட்போனை பேங்க் சலுகைகளுடன் குறைந்த விலையில் வாங்கலாம், ICICI பேங்க் மற்றும் HDFC பேங்க் கார்ட்கள் மூலம் போனை 2000 ரூபாய் குறைவாக வாங்கலாம், அதாவது விற்பனையின் போது ஃபோனின் அடிப்படை மாடலை ரூ.17,999க்கு பெறலாம், இது தவிர ஃபோனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு மாடலை ரூ.19,999க்கு வாங்கலாம், அதே சலுகை 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபிக்கும் பொருந்தும். போனின் ஸ்டோரேஜ் மாதிரி இது நடக்கும். இந்த போன் விற்பனை அமேசான் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

iQOO Z9s சிறப்பம்சம்.

iQOO Z9s Pro ஆனது 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. நீங்கள் 120Hz ரெப்ராஸ் ரேட்டை 387 ppi பிக்சல் டென்சிட்டி வழங்குகிறது.

கேமரா- இது 50MP Sony IMX882 ப்ரைமரி கேமரா + 2MP பொக்கே கேமரா, OIS உடன் 16MP முன் கேமரா.

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இந்த போனில் MediaTek Dimensity 7300 செயலி உள்ளது, இது Mali-G615 GPU மற்றும் 12GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.

iQOO Z9s Pro யில் 5500mAh பேட்டரியுடன் 44W FlashCharge பவர் உடன் வருகிறது. இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 14க்கான சப்போர்டுடன் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளன.

இதையும் படிங்க Vivo T3 Pro 5G VS iQOO Z9s Pro 5G: ஒரே மாதுரியான லுக்கில் இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo