iQOO Z9 Lite 5G இந்தியாவில் அறிமுக தேதி வெளியானது

Updated on 02-Jul-2024
HIGHLIGHTS

iQOO Z9 Lite 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 15 தேதி அறிமுகமாகும்

நிறுவனம் இந்த போனின் பின்புற டிசைனில் அற்புதத்தை காட்டியுள்ளது

மீடியாவின் அறிக்கையின் படி iQOO Z9 Lite 5G யில் விவோ போனின் ரீ பிராண்டட் வெர்சன் ஆகும்

iQOO Z9 Lite 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 15 தேதி அறிமுகமாகும் , இது நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5G போனாக இருக்கலாம், நிறுவனம் இந்த போனின் பின்புற டிசைனில் அற்புதத்தை காட்டியுள்ளது இந்த போனில் டூயல் ரியர் கேமராக்கள் இருக்கும் மற்றும் அது நீல நிறத்தில் வரும். iQOO Z9 Lite 5G ஆனது MediaTek யின் டிமான்சிட்டி6300 ப்ரோசெசரை கொண்டிருக்கும். போனில் 6 ஜிபி ரேம் வழங்கப்படும், அதனுடன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். iQOO Z9 Lite 5G ஆனது AnTuTu 10 யில் 4.14 லட்சம் புள்ளிகளைப் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது..

iQOO Z9 Lite 5G லீக் தகவல்

மீடியாவின் அறிக்கையின் படி iQOO Z9 Lite 5G யில் விவோ போனின் ரீ பிராண்டட் வெர்சன் ஆகும் இதன் பெயர் Vivo T3 Lite 5G, இது சமீபத்தில் ரூ.10,499 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நடந்தால், வரவிருக்கும் iQoo சாதனத்தில் 6.56 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே இருக்கும், அதனுடன் 90Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்கப்படும்.

நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் iQOO Z9 Lite 5G யின் மேல் வெர்சனக iQoo Z9 அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஃபோனில் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 1,800 nits உச்ச பிரகாசம் மற்றும் 120Hz புதுப்பிப்பு விகிதம் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. Z9 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழமான லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

#iQOO Z9 Lite 5G

இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம் பின்புற கேமராவை போனில் வழங்க முடியும். இதனுடன் 2 MP யின் மற்றொரு சென்சார் இருக்கும். முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும். இந்த ஃபோன் 5 ஆயிரம் mAh பேட்டரியுடன் நிரம்பியுள்ளது, இது 15 வாட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் iQOO Z9 Lite 5G அமேசான் மற்றும் IQoo இந்தியா வெப்சைட்டில் விற்பனை செய்யப்படும்.

iQoo Z9 யில் Snapdragon 7 Gen 3 சிப் வழங்கப்படுகிறது, இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் சேர்க்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் பெரிய 5,000mAh பேட்டரி உள்ளது, இது 44W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க: Honor 200 5G Series இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Amazon லிஸ்டிங்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :