அறிமுகத்திற்க்கு முன்னே iQOO Z9 பற்றிய அனைத்து தகவலும் அம்பலமாகியது

அறிமுகத்திற்க்கு முன்னே iQOO Z9 பற்றிய அனைத்து தகவலும் அம்பலமாகியது
HIGHLIGHTS

iQOO Z9 இந்தியாவில் 12 மார்ச் அறிமுகமாகும்.,

, iQOO Z9 இந்தியா விலையுடன், பல விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

iQOO Z9 ஸ்மார்ட்போனில் இந்திய சந்தையில் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய்க்கு பக்கத்தில் அறிமுகமாகும்,

iQOO மற்றும் ஒரு புதிய ஸ்மார்ட்போன் iQOO Z9 அறிமுகம் செய்ய முழு தயார் செய்து வருகிறது, iQOO Z9 யின் 12 மார்ச் அறிமுகமாகும்., இந்தியாவில் அறிமுகம் செய்ய இன்னும் சிறிது நேரம் உள்ளது என்றாலும், iQOO Z9 இன் இந்திய விலை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், iQOO Z9 இந்தியா விலையுடன், பல விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. iQOO Z9 இந்தியா விலை மற்றும் சிறப்பம்சங்கள் தகவலை பற்றி பார்க்கலாம்.

iQOO Z9 India Price (Expected)

iQOO Z9 ஸ்மார்ட்போனில் இந்திய சந்தையில் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய்க்கு பக்கத்தில் அறிமுகமாகும், இந்த விலையை நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் X (ட்விட்டர்) மதிப்பீட்டில் காட்டியுள்ளார். iQOO Z9 இன் விலை, ஏற்கனவே சந்தையில் இருக்கும் நத்திங் ஃபோன் 2a மற்றும் Realme 12 Pro போன்றவற்றுக்கு ஒத்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது அல்லது ஊகிக்கப்படுகிறது.

இருப்பினும் இந்த லிஸ்ட்டில் Redmi Note 13 Pro யின் அடங்கியுள்ளது இப்போது இந்த போன் எந்த விலையில் வெளியிடப்படும் என்பதை இப்போது வெளியிடும் நேரத்தில் பார்க்க வேண்டும், இப்போதைக்கு இந்த போனின் விலை குறித்து ஊகங்கள் மட்டுமே செய்ய முடியும்.

Z9 யில் இருக்கும் இந்த அசத்தலான அம்சம்

iQOO Z9 ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 7200 ப்ரோசெசர் கொண்டிருக்கும், இந்த வகையில் இந்த போன் இதுவரை இல்லாத பாஸ்ட் போனாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த சக்திவாய்ந்த ப்ரோசெசர் இருக்கப் போவதால் இவ்வாறு கூறப்படுகிறது. இது தவிர, iQOO Z9 ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா செட்டிங் கிடைக்கப் போகிறது. இந்த கேமரா செட்டிங்கில் 50MP Sony IMX882 சென்சார் இருக்கும், இது OIS உடன் போனில் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் iQOO Z9 போனில் ஒரு AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்ப்பர்க்கபடுகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் யில் வேலை செய்யும் இந்த போனை பொறுத்தவரை, அதில் நீங்கள் பெறும் ஸ்க்ரீன் 1800 நிட்களின் ப்ரைட்னஸ் உடன் கிடைக்கும் என்றும் கூறலாம். இதன் பொருள் இந்த பிரிவில் நீங்கள் இந்த போனில் ப்ரைட் டிஸ்ப்ளே பெறலாம்.

iQOO Z9 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருக்கும், மேலும் ஃபோனில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இருக்கும். இது தவிர, ஒரு பிரஷ்டு கிரீன் மாறுபாடும் iQOO ஆல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி போனின் டிசைன் விவரங்களும் டீஸர் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த டீசரில் டிசைன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, பின்புறத்தில் பச்சை நிறத்துடன் கூடிய மேட் ஃபினிஷ் போனில் கிடைக்கும். இப்போது மீதமுள்ள தகவல்கள் மார்ச் 12 அன்று வெளியிடப்படும் நேரத்தில் வெளியிடப்படும்.

இதையும் படிங்க: Google Pixel 8a யின் விலை Pixel 7a விட அதிகமாக இருக்கும் மேலும் பல தகவல் லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo