3D கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் செம்ம லுக் கொண்ட iQOO Z7 Pro அறிமுகம் டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க.
IQOO யின் புதிய iQoo Z7 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கிராஃபைட் மேட் மற்றும் ப்ளூ லகூன் ஆகிய இரண்டு நிற விருப்பங்களில் இந்த போன் வரும்.
இந்த போனின் விற்பனை செப்டம்பர் 5ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும்.
IQOO யின் புதிய iQoo Z7 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராஃபைட் மேட் மற்றும் ப்ளூ லகூன் ஆகிய இரண்டு நிற விருப்பங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3D கர்வட் டிஸ்ப்ளேவுடன் வரும் அதன் பிரிவில் இது மிகவும் மெல்லிய மற்றும் மெலிதான ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் திக்னஸ்7.36 mm எடை 174 கிராம். கைரேகை எதிர்ப்புடன் வரும் போனின் பின்புறத்தில் ஏஜி கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விலை மற்றும் சிறப்பம்சம்.
IQ Z7 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.23,999. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்ரூ.24,999க்கு வருகிறது. இந்த போனின் விற்பனை செப்டம்பர் 5ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் IQ ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து போனை வாங்கலாம். SBI கார்டில் இருந்து போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, 8 ஜிபி 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.21,999 ஆக இருக்கும். 8 ஜிபி 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.22,999 ஆக இருக்கும்.
iQOO Z7 Pro டாப் 5 அம்சம்
iQOO Z7 Pro டிஸ்ப்ளே
IQ Z7 Pro ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதன் அப்டேட் வீத சப்போர்ட் 120Hz ஆகும். ஃபோன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது. போனில் கிளாஸ் ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. போன் HDR சப்போர்டுடன் வருகிறது. நான் 1300 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது இந்த போன SGS சான்றிதழ்களுடன் வருகிறது.
ப்ரோசெசர்
இதில், இரண்டாம் ஜெனரேசன் 4nm செயல்முறையான MediaTek Dimensity 7200 5G மொபைல் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் Antutu ஸ்கோர் 728K. போனுக்கு 8 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. போன லிக்யுட் கூலிங் அமைப்பு சப்போர்டுடன் வருகிறது. போனில் அல்ட்ரா கேமிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோஷன் கன்ட்ரோல், இன்ஸ்டன்ட் டச் மாதிரி வீதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஃபன்டச் OS மூலம் செயல்படுகிறது.
இந்த போனுக்கு 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 3 வருட செக்யுரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும். ஆல்பம் பாதுகாப்பு அம்சம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
iqoo z7 கேமரா
போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இதன் மெயின் கேமரா 64MP ஆகும், இது Aura Light மற்றும் OIS உடன் வருகிறது. இது தவிர, 2எம்பி செகண்டரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முன்புறத்தில் 12எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. போர்ட்ரெய்ட் மோட், லோ-லைட் போர்ட்ரெய்ட் மோட் ஆகிய ஆப்ஷன்கள் போனில் கொடுக்கப்பட்டுள்ளன.
iqoo z7 Pro பேட்டரி
இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் இதில் 4600mAh பெரிய பேட்டரி உள்ளது. 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போனுடன் வழங்கப்பட்டுள்ளது. 22 நிமிடங்களில் ஃபோன் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது.
iqoo z7 கனேக்ட்டிவிட்டி.
இந்த போன் ஐபி 52 ஐபி மதிப்பீட்டில் வருகிறது. போனில் 105ஜி பேண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், Wi-Fi 6 மற்றும் ப்ளூடூத் 5.3க்கான ஆதரவும் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile