iQOO சமிபத்தில் அதன் லேட்டஸ்ட் போன் iQOO Neo 10R இந்திடியவில் அறிமுகம் செய்தது, அதன் பிறகு இப்பொழுது iQOO Z10 அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது இந்த போன் ஏப்ரல் 11 அன்று இந்திய சந்தையில் கொண்டு வர தயார் செய்து வருகிறது மேலும் இந்த போனில் அனைகாரையும் கவர்ந்த மிக பெரிய விஷயம் 7300mAh பேட்டரி கொண்டுள்ளது மேலும் இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.
iQOO Z10 போனின் வெளியீடு ஏப்ரல் 11 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது . அறிமுகத்திற்கு முன், நிறுவனம் ஒரு புதிய டீசர் வெளியிட்டுள்ளது, அதில் போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போன் 7300mAh பேட்டரியுடன் வரப்போகிறது. இவ்வளவு பெரிய பேட்டரியுடன், பாஸ்ட் சார்ஜிங் அம்சம் முக்கியமானது. குறிப்பாக இதுபோன்ற சூழ்நிலைகளில், நிறுவனங்கள் வேகமான சார்ஜிங்கை வழங்குவதைத் தவிர்க்கின்றன, ஆனால் IQOO இங்கேயும் ஒரு பெரிய பாய்ச்சலை எடுக்கப் போகிறது. இந்த போன் 7300mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங்கைப் வழங்கப்போகிறது. 90W ஃப்ளாஷ்சார்ஜ் அம்சம் பிராண்டால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
iQOO Z10 இன் பேட்டரி பவர் மிகவும் பெரியது. 90W ஃப்ளாஷ்சார்ஜ் மூலம் போனை வெறும் 33 நிமிடங்களில் பாதி சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது, இது ஒரு பெரிய விஷயம். முன்னதாக, இந்த போன் இவ்வளவு பெரிய பேட்டரியுடன் வரப் போகிறது என்றாலும், அதன் அளவு மெலிதாகவே இருக்கும் என்று நிறுவனம் போனை பற்றி வெளிப்படுத்தியிருந்தது. இந்த போனின் திக்னஸ் 7.89mm மட்டுமே என்று கூறப்படுகிறது.
iQOO Z10 யின் அம்சங்கள் பற்றி பேசுகையில், இந்த போனில் குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே இருக்கும். இது ஒரு AMOLED பேனலாக இருக்கும். நிறுவனம் இந்த போனை கிளேசியர் சில்வர் மற்றும் ஸ்டெல்லர் பிளாக் கலர்களில் அறிமுகப்படுத்த உள்ளது. அதிகாரப்பூர்வமாக iQOO மற்ற அம்சங்கள் வெளியிடவில்லை.
இதையும் படிங்க Lava புதிய போன் அறிமுகம் வெறும் ரூ.6,999 கொண்ட போனில் AI சப்போர்ட் டாப் அம்சங்கள் பாருங்க