iQOO Neo 9 Pro யின் கேமிங் போனின் இந்தியாவின் அறிமுக தேதி வெளியானது
iQOO இந்தியாவில் அதன் iQOO Neo 9 Pro ஸ்மார்ட்போனை பிப்ரவரி 22 அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது இந்த போனின் மைக்ரோசைட் அமேசானில் லைவ் செய்யப்பட்டுள்ளது அதன் முக்கிய சிறப்பம்சங்கள் சிலவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த போனின் உறுதிப்படுத்தப்பட்ட சிறப்பம்சம் ப்ரோசெசர் பேட்டரி மற்றும் கேமரா போன்றவை. தெரியாதவர்களுக்கு, iQOO Neo 7 Pro ஸ்மார்ட்போனின் வாரிசாக Neo 9 Pro போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
iQOO Neo 9 Pro:Amazon மைக்ரோ சைட் தகவல்.
ஐகூ யின் அப்கம்மிங் போனின் அமேசான் மைக்ரோ-சைட் இந்த போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. நியோ 9 ப்ரோவில் சிறந்த கேமிங் பர்போமன்சை வழங்கும் சூப்பர் கம்ப்யூட்டிங் சிப் க்யூ 1 உடன் வழங்கப்படும் என்பதும் தெரியவந்துள்ளது.
போட்டோ எடுப்பதற்காக, நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டிங் இருக்கும், இதில் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா இருக்கும். மைக்ரோ தளத்தின் படி, இந்த போனில் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது; 8ஜிபி+256ஜிபி மற்றும் 12ஜிபி+256ஜிபியில் கிடைக்கும்.
இந்த ஃபோன் 5160mAh பேட்டரியுடன் வரும், இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் மைக்ரோ-சைட் போனின் சிவப்பு நிற வேரியண்டை வெளிப்படுத்தியுள்ளது, பின்புற பேனலில் ஒரு வெள்ளை வேர்டிகள் டுயள் டோன் கலர் பினிஷ் உள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் “பிரீமியம் லெதர் ஃபினிஷ்” வழங்கப்படும்.
இதையும் படிங்க: WhatsApp கொண்டு வருகிறது வெப் பயனர்களுக்கு சேட் லோக் அம்சம்
இந்த விவரங்களைத் தவிர, அமேசான் மைக்ரோ-தளம் மூலம் நியோ 9 ப்ரோ போனை பற்றி வேறு எந்த விவரங்களும் கிடைக்கவில்லை இருப்பினும், செல்ஃபிக்களுக்காக முன்பக்க 16எம்பி கேமரா இருக்கலாம் என்று வதந்திகள் உள்ளன. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Origin OS 4 யில் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile