iQOO Neo 9 Pro அறிமுக தேதி வெளியானது 16GB RAM, கொண்டிருக்கும்

iQOO Neo 9 Pro அறிமுக தேதி வெளியானது 16GB RAM, கொண்டிருக்கும்
HIGHLIGHTS

iQOO தனது புதிய நியோ-சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

இந்த மாடல் பிப்ரவரி 22, 2024 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்

நிறுவனம் தனது X (ட்விட்டர்) பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான iQOO தனது புதிய நியோ-சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. புதிய iQOO Neo 9 Pro ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் பிப்ரவரி 22, 2024 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தனது X (ட்விட்டர்) பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியது.

iQOO Neo 9 Pro யின் எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

சில ஆன்லைன் லீக்கின் படி , வரவிருக்கும் நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 1.5K தெளிவுத்திறன் மற்றும் 144Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்யும் இந்த போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கலாம் மற்றும் பல ஸ்டோரேஜ் கிடைக்கலாம்.

கேமரா பற்றி பேசுகையில் , இந்த ஃபோனில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் இருக்கும். மேலும், செல்ஃபிக்களுக்காக 16எம்பி முன்பக்க கேமராவுடன் வழங்கப்படலாம்.

இதையும் படிங்க :Amazon Great Republic Day Sale வெறும் 15ரூபாயில் கிடைக்கும் 40 இன்ச் TV

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். இது தவிர, இது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட UI உடன் வரலாம் என்று கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo