iQoo Neo 7 விலை இந்தியாவில் அதிரடியாக குறைப்பு

Updated on 08-Jan-2024
HIGHLIGHTS

iQOO Neo 9 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது,

iQoo Neo 7 யின் விலை குறைக்கப்படுவது இது இரண்டாவது முறை

iQoo Neo 7 யின் விலை இரண்டாவது முறையாக ரூ.3000 குறைக்கப்பட்டுள்ளது.

iQOO Neo 9 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது, ஆனால் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே iQoo Neo 7 யின் விலை குறைக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பதை உங்களுக்கு நினைவுட்டுகிறோம் முன்னதாக, iQOO நியோ 7 ஸ்மார்ட்போனின் முதல் விலைக் குறைப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் செய்யப்பட்டது. iQoo Neo 7 யின் விலை இரண்டாவது முறையாக ரூ.3000 குறைக்கப்பட்டுள்ளது.

iQoo Neo 7 யின் புதிய விலை தகவல்

iQoo Neo 7 இன் 8ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.27,999 ஆகவும், அதன் 12ஜிபி வேரியண்டின் விலை ரூ.31,999 ஆகவும் இருந்தது. இருப்பினும், இந்த போன் தற்பொழுது விலைக் குறைப்புக்குப் பிறகு, iQOO நியோ 7 யின் 8 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.24,999 ஆக உள்ளது. விலைக் குறைப்புக்குப் பிறகு, அதே 12 ஜிபி வேரியண்டின் விலை ரூ.27,999 ஆக உள்ளது. இந்த போன் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் மற்றும் ஃப்ரோஸ்ட் ப்ளூ என இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது.

Neo 7 சிறப்பம்சங்கள்

இந்த ஃபோனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,300 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது இதன் ரேசளுசன் 1080 x 2400 பிக்சல்கள் இருக்கிறது.

iQoo யின் ப்ரோசெசர் பற்றி பேசினால் யின் இதில் Mediatek Dimensity 8200 செயலி மூலம் 4nm தொழில்நுட்பத்தில் இயங்குகிறது

இதில் ஆண்ட்ராய்டு 13 ஒப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கிறது இந்த போன் இரண்டு வேரியண்டில் வருகிறது 8GB+128GB மற்றும் 12GB+256GB ஸ்டோரேஜ் வகை ஆகும்

இதையும் படிங்க OnePlus 12R விற்பனை Amazon யில் நடைபெறும், பல தகவல் வெளியானது.

இதில் போட்டோ எடுக்க Neo 7 மூன்று பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது. ஃபோன் OIS உடன் 64MP பின்புற கேமரா செட்டிங்குடன் வருகிறது. போனில் 2எம்பி டெப்த் கொண்ட 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. பவர் பேக்கப்பிற்காக, ஃபோனில் 5000mAh டூயல் செல் பேட்டரி உள்ளது, இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :