iQOO அதன் ஹை பர்போமான்ஸ் போனை இந்தியாவில் இன்று வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் பெயர் iQOO 13 ஆகும் இது மிக பாஸ்டன ஸ்மார்ட்போன் ஆகும் ஏன் என்றால் நிறுவனம் முதல் முறையாக இதில் Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசர் வழங்கியுள்ளது
iQOO 13 போனின் டிசைன் பற்றி பேசினால் இதில் ஐ கேர் பாதுகாப்புடன் இதில் polarization டெக்னாலஜி சர்டிபஈட் மூலம் இது விசுவல் ஹெல்த் லேப் யில் சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் 2592 Hz PWM Dimming கண் எரிச்சல் மற்றும் கண்ணிற் தன்னிற் போன்றவற்றை வராது அதாவது நீங்கள் எந்த இடத்திலும் கேமிங் செய்ய முடியும்
iQOO 13 டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.82-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் iQOO 13 Qualcomm Snapdragon 8 Elite சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் Q2 கேமிங் சிப் இருப்பதால் கண்ணை பாதுகாக்கும்
சாப்ட்வேர் பற்றி பேசினால், iQOO 13 யில் Funtouch OS 15, அடிபடையின் கீழ் Android 15, மற்றும் நான்கு ஆண்டு ஆண்ட்ரோயட் அப்டேட் மற்றும் 5 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.
iQOO 13 மூன்று கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் 50-மெகாபிக்சல் Sony IMX921 ப்ரைம் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் Sony டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50-megapixel ISOCELL JN1. முன்பக்கத்தில், 32MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
iQOO 13 ஆனது AI-இயங்கும் கேமரா திறன்களுடன் வருகிறது. AI ஃபோட்டோ என்ஹான்சர், கைமுறையாக சரிசெய்தல் தேவையில்லாமல், தெளிவு மற்றும் வண்ணத்தை மேம்படுத்த புகைப்பட அளவுருக்களை புத்திசாலித்தனமாக மேம்படுத்துகிறது. கூடுதலாக, ஃபோன் பட கட்அவுட், உடனடி உரை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது படங்களிலிருந்து உரை, பாடங்கள் மற்றும் உள்ளடக்கத்தைப் பிரித்தெடுக்க AI ஐப் பயன்படுத்துகிறது. லைவ் கால் ட்ரான்ஸ்லேட், நிகழ்நேரத்தில் ஃபோன் அழைப்புகளை மொழிபெயர்ப்பது மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான தகவல்தொடர்புக்கு உதவும்
iQOO 13 போனில் 6,000mAh பேட்டரி உடன் இதில் 120W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது
iQOO 13 இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது – Legend மற்றும் Nardo Grey-, மற்றும் இரண்டு வகைகளில் -12GB + 256GB மற்றும் 16GB + 512GB. 12 ஜிபி + 256 ஜிபி வகையின் விலை ரூ. 54,999 மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி வகையின் விலை ரூ.59,999.
iQOO 13 ஆனது டிசம்பர் 05 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு முன்பதிவுக்கு கிடைக்கும் மற்றும் அதன் முதல் விற்பனை டிசம்பர் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Vivo பிரத்தியேக கடைகள், iQOO இ-ஸ்டோர் மற்றும் Amazon.in ஆகியவற்றில் தொடங்கும்.
இதையும் படிங்க:OnePlus யின் இந்த போனில் 7000 வரை அதிரடி டிஸ்கவுன்ட்