iQOO 13 சமிமபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்படது, இப்பொழுது இது இந்திய உட்பட மற்ற நாடுகளுக்கும் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது. அந்தவகையில் முதலிடத்தில் இந்தியா இருக்கிறது iQOO இந்தியாவில் போனின் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. இது அமேசானில் தொடங்கப்படும், இதற்காக நிறுவனம் மைக்ரோசைட்டையும் நேரலை செய்துள்ளது. போன் குறித்த சில விவரங்களும் டீசர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த போனின் இந்திய வெர்சன் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
iQOO 13 இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என உருதி செய்யப்பட்டுள்ளது, இது தவிர, iQOO இந்தியா தனது X யில் அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் இந்தியாவுக்கான இந்த போன் டீசரையும் வெளியிட்டுள்ளது.
நிறுவனம் இந்த போனை BMW Motorsport உடன் சேர்ந்து கொண்டு வரும் நிறுவனம் லெஜண்ட் எடிஷன் மோனிகருடன் போனை அறிமுகப்படுத்த உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கலர் டிசைன் போஸ்டரில் காணலாம். பர்போமான்ஸ் மற்றும் கட்டுப்பாட்டின் அடிப்படையில் இந்த போன் ஒரு இறுதி போன் அல்டிமேட்டாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
இருப்பினும், இந்த போனின் வெளியீட்டு தேதியை ஐகு இன்னும் வெளியிடவில்லை. இதுவரை வெளியான லீக்கின் , டிசம்பர் மாத ஆரம்பத்தில் தான் இதை அறிமுகப்படுத்த முடியும். நிறுவனம் அமேசான் லிஸ்டில் அதன் சில அம்சங்களை வெளியிட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் மட்டுமே இந்த போன் இந்தியாவில் வெளியிடப்படும். இது 144fps வரை கேம் பிரேம் சப்போர்டுடன் Q2 சூப்பர் கேமிங் சிப்பைக் கொண்டிருக்கும்.
இந்த போன் 2K ரேசளுசனுடன் வருகிறது, இதில் 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது, இதன் பொருள் பயனர் தொலைபேசியில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெறப் போகிறார். சீனாவில், நிறுவனம் வெள்ளை, பச்சை, கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில், இந்த போன் ஒயிட் லெஜண்ட் எடிஷன் மற்றும் கிரே ஷேடுகளில் வெளியிடப்படலாம். விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், இது 6.82 இன்ச் BOE பிளாட் ஸ்க்ரீனை கொண்டுள்ளது.
தொலைபேசி 4500 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. 50எம்பி மெயின் சென்சார் கொண்ட பின்புறத்தில் டிரிபிள் லென்ஸ் அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான FunTouch OS 15 இல் இயங்குகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரின் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Samsung Galaxy S25 Series அனைத்து தகவலும் லீக் என்ன என்ன பாருங்க